ஒருநாள் தலைமையாசிரியரான மாணவி…முதல் மதிப்பெண் பெற்றதால் கிடைத்த வாய்ப்பு!

 

ஒருநாள் தலைமையாசிரியரான மாணவி…முதல் மதிப்பெண் பெற்றதால் கிடைத்த வாய்ப்பு!

தலைமை ஆசிரியராக நியமித்து கௌரவப்படுத்தினர். ஒருநாள் தலைமை ஆசிரியை மாணவி மதுமிதாவிற்கு சால்வை அணிவித்தனர். 

மாணவ, மாணவியர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு பள்ளிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதனால் மாணவர்களின் தன்னம்பிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே செல்கிறது எனலாம்.  அதன்படி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த நெசல் கிராமம் ஒன்று உள்ளது. இங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 154 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்குள்ள ஆசிரியர்கள் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில்  அரையாண்டு தேர்வில் 10- ம் வகுப்பில்  முதல் மதிப்பெண் எடுக்கும் நபரை ஒருநாள் தலைமை ஆசிரியராக நியமிப்பதாக அறிவித்திருந்தனர். 

ttn

அந்த வகையில் 447 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்து  மாணவி மதுமிதாவை நேற்று ஒருநாள் தலைமை ஆசிரியராக நியமித்து கௌரவப்படுத்தினர். ஒருநாள் தலைமை ஆசிரியை மாணவி மதுமிதாவிற்கு சால்வை அணிவித்தனர். 

இதையடுத்து மாணவி மதுமிதா பள்ளியில் உள்ள வகுப்பறைக்கு சென்று மாணவ, மாணவிகளின் வருகை பதிவேட்டை பதிவு செய்தார். பின்பு மாணவ மாணவிகள் மத்தியில் உரையாடி மகிழ்ந்தார்.  இவர்  புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நெசவு கூலி தொழிலாளி சௌந்தராஜன் சரிதா தம்பதியினரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.