ஒருத்தர் செய்த தவறால் திரையுலகையே களங்கப்படுத்துவதா? பாராளுமன்றத்தில் விளாசிய எம்.பி ஜெயா பச்சன்!

ஒருத்தர் செய்த தவறால்  திரையுலகையே களங்கப்படுத்துவதா? பாராளுமன்றத்தில் விளாசிய எம்.பி ஜெயா பச்சன்!

திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு குறித்து சமாஜ்வாடி கட்சி எம்.பி. ஜெயா பச்சன் பாராளுமன்றத்தில் பேசினார்.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தொடர்பாக தினந்தோறும் பல புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதனுள் போதைப்பொருள் பயன்பாடும் ஒன்று. சுஷாந்தின் காதலி ரியா தான் அவருக்கு போதைப்பொருள் வாங்கிக் கொடுத்ததாக தெரிகிறது. இது தொடர்பாக மும்பை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. சுஷாந்த் மரணத்தில் போதை பொருள் உபயோகிக்கப்பட்டது தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிகப்பட்டது.

ஒருத்தர் செய்த தவறால்  திரையுலகையே களங்கப்படுத்துவதா? பாராளுமன்றத்தில் விளாசிய எம்.பி ஜெயா பச்சன்!

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், எம்பி ரவி கிஷன் திரைத்துறையில் போதைப்பொருள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதாக தனது கருத்தை கூறினார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய சமாஜ்வாடி கட்சி எம்.பி. ஜெயா பச்சன், திரைத்துறையில் ஒரு சிலர் போதைப்பொருள் பயன்படுத்துவதால் மொத்த திரையுலகையே களங்கப்படுத்த முடியாது என நேரிடியாக அவரது பெயரை குறிப்பிடாமல் எம்பி ரவி கிஷனின் கருத்துக்கு ஆட்சேபம் தெரிவித்தார்.

ஒருத்தர் செய்த தவறால்  திரையுலகையே களங்கப்படுத்துவதா? பாராளுமன்றத்தில் விளாசிய எம்.பி ஜெயா பச்சன்!

தொடர்ந்து, நேற்று திரைத்துறை குறித்து பேசிய உறுப்பினர் திரையுலகை சேர்ந்தவரே, அவர் திரைத்துறைக்கு எதிராக பேசியது அவமானம் என்றும் பொழுதுபோக்கு துறையில் இருப்பவர்கள் சோஷியல் மீடியாக்களால் தங்கள் மீது சேற்றை வாரி இரைத்துக் கொள்கின்றனர் என்றும் கூறினார். மேலும், இது போன்ற கருத்துகளை பேச வேண்டாம் என அரசு அறிவுறுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.