ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு, சுகாதார நலன்கள்; கூகுள் அதிரடி அறிவிப்பு!

 

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு, சுகாதார நலன்கள்; கூகுள் அதிரடி அறிவிப்பு!

அமெரிக்காவில் அதிக சம்பளம் பெறுபவர்களில் சிலராக தொழில்நுட்ப நிறுவன தொழிலாளர்கள் இருந்தாலும், பெரும்பாலும் அவர்கள் அனைவருமே அதிகமான நேரங்கள் பணியாற்ற நிர்பந்திக்கப்படுகின்றனர்

சான்பிரான்சிஸ்கோ: ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் சுகாதார நலன்கள் அளிக்கப்படும் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் அதிக சம்பளம் பெறுபவர்களில் சிலராக தொழில்நுட்ப நிறுவன தொழிலாளர்கள் இருந்தாலும், பெரும்பாலும் அவர்கள் அனைவருமே அதிகமான நேரங்கள் பணியாற்ற நிர்பந்திக்கப்படுகின்றனர்.

google

அதேபோல், தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒப்பந்த ஊழியர்களை பணியமர்த்துவது பொதுவான விஷயம். ஆனாலும், அவர்களுக்கு முழு நேர ஊழியர்களுடன் ஒப்பிட்டால் ஊதியம் குறைவாக வழங்கப்படுவதுடன், குறைவான சலுகைகளே வழங்கப்படுகிறது.

அந்த வகையில், கூகுள் நிறுவனத்தின் பகுதி நேர ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, முழு நேர ஊழியர்களுடன் ஒப்பிடுகையில் ஊதியம் குறைவாக வழங்கப்படுவதாகவும், எனவே விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் எனவும் அந்நிறுவனத்துக்கு அழுத்தம் ஏற்பட்டது.

பகுதி நேர ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் எத்தனை ஊழியர்கள் பணியாற்றுகின்றனர் என கூகுள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. எனினும், ஆயிரக்கணக்கான பகுதி நேர ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றுவார்கள் என தெரிகிறது.

google employees

இந்நிலையில், தனது கொள்கைளில் மாற்றம் கொண்டு வந்துள்ள கூகுள் நிறுவனம் தனது விதிகளை திருத்தி, ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் சுகாதார நலன்கள் அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.

ஜனவரி 2020 வரை இருக்கும் பணியாளர் நியமன நிறுவனங்கள் குறைந்தபட்ச ஊதிய தேவைகள் செயல்படுத்த வேண்டும் எனவும்,  ஜனவரி 2020 வரை இருக்கும் நிறுவனங்கள் சுகாதார நலன்களை செயல்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விதிகளின் படி, மூன்றாம் நபர் நிறுவனங்கள் மூலம் பணியமர்த்தப்படும் ஊழியர்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு 15 டாலர்கள் ஊதியம், 12 மாத பெற்றோர் கடமைக்கான விடுமுறை (parental leave) ஊதியத்துடன் வழங்கப்படும் எனவும், திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான செலவாக ஆண்டுக்கு 5000 டாலர்கள் வழங்கப்படும் எனவும் தெரிகிறது.

google

முன்னதாக, அமெரிக்க ராணுவத்தின் சட்டவிரோத ட்ரோன் போர்முறைக்கான மென்பொருளை கூகுள் வடிவமைத்தது என்று வெளியான தகவல்கள் அந்நிறுவன ஊழியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

sundar pichai

எனவே, போர் வியாபாரத்தில் கூகுள் சம்பந்தப்படக் கூடாது மற்றும் பாலியல் விவகாரங்களில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காக நிறுவனத்தின் கொள்கைகளை மாற்ற வேண்டும் என கூகுள் நிறுவனத்தில் ஊழியர்கள் பலர் கடந்த ஆண்டு ஒன்றிணைந்து கோரிக்கை விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க

பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவுக்கு 1வருட சிறை தண்டனை!?