“ஒபாமாவுக்கு எதுக்கு நோபல் பரிசு கொடுத்தாங்கன்னு.. அவருக்கே தெரியாது” அதிபர் டிரம்ப் கிண்டலான பேச்சு!!

“ஒபாமாவுக்கு எதுக்கு நோபல் பரிசு கொடுத்தாங்கன்னு.. அவருக்கே தெரியாது” அதிபர் டிரம்ப் கிண்டலான பேச்சு!!

முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு எதற்காக நோபல் பரிசு கொடுத்தார்கள் என அவருக்கே தெரியாது என்று தற்போதைய அதிபர் டிரம்ப் கிண்டலாக பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐநா சார்பில் 75 வது பொதுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் உலகெங்கிலும் பல முக்கிய தலைவர்கள் பங்கேற்று சிறப்புரை ஆற்றி வருகின்றனர். 

trump and ibrankhan

இந்நிலையில் சவுதி அரேபியாவில் இரண்டு நாள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு, பாகிஸ்தான் பிரதமர் அமெரிக்கா சென்றார். அங்கு சில மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்திய இம்ரான்கான் மற்றும் டிரம்ப் இருவரும் திட்டமிட்டபடி பாகிஸ்தான் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்து விட்டு அவர்களின் கேள்விக்கும் பதில் அளித்தனர்.

அப்போது பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் இடையேயான முரண்பாடு மற்றும் உறவு ஆகியன குறித்து கேள்வி கேட்கப்பட்டது. பின்னர் டிரம்ப்-இடம் நிருபர் ஒருவர் கேள்வி கேட்கையில், ‘நீங்கள் நோபல் பரிசு பெறுவீர்களா?.. அதற்கு தகுதியானவர் என நினைக்கிறீர்களா?’ எனக் கேட்டார். 

obama

அதற்கு பதிலளித்த டிரம்ப் கூறுகையில், நோபல் பரிசை ஆராய்ந்து வாழங்கினால் நிச்சயம் நான் அதைப்பெற தகுதியானவன். எனக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நோபல் பரிசுகள் கிடைக்கும். ஆனால், அங்கு நியாயமாக முறையில் வழங்கப்படுவதில்லை. முன்னாள் அதிபர் ஒபாமாவிற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதிலேயே தெரிகிறது அங்கு நியாயமில்லை என்று. எதற்காக ஒபாமாவிற்கு நோபல் பரிசு வழங்கினார்கள் என்று அவருக்கும் தெரியாது. நிச்சயம் நோபல் பரிசுக்கான ஜூரி மத்தியில் நியாயமான கருத்துக்கள் நிலவினாமல் எனக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்றார்.

அமெரிக்காவிற்கும் வட கொரியாவுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வருவது உலகம் அறிந்த ஒன்றே. இதற்கிடையில் அதிபர் டிரம்ப் வட கொரிய அதிபரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி அமைதியை நிலைநாட்ட முன்னேற்பாடுகள் செய்தார். இதனால் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என ஜப்பான் பிரதமரால் பரிந்துரை செய்யப்பட்டது. மேலும் நார்வே நாட்டைச் சேர்ந்த சில தலைவர்களும் டிரம்ப்பிற்கு நோபல் பரிசு வழங்க பரிந்துரை செய்ததும் குறிப்பிடத்தக்கது.