ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிக்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகம்

 

ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிக்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகம்

ஒன்பிளஸ் நிறுவனம் கூடிய விரைவில் ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

டெல்லி: ஒன்பிளஸ் நிறுவனம் கூடிய விரைவில் ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை குறைந்த விலையில் விற்பனை செய்து முன்னணி நிறுவனங்கள் பட்டியலில் ஒன்பிளஸ் நிறுவனமும் ஒன்றாகும். ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து இந்நிறுவனம் அடுத்ததாக ஸ்மார்ட் டிவி மாடல்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. 2020-ஆம் ஆண்டுவாக்கில் இவை அறிமுகம் செய்யப்படும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் டி.வி. மாடல்களும் ஃபிளாக்ஷிப் பிரிவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் அதிக தரமுள்ளதாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒன்பிளஸ் நிறுவனம் தனது டி.வி. மாடல்களை அறிமுகம் செய்ய அதிக நேரத்தை எடுத்துக் கொள்வதாக கூறப்படுகிறது.

ஒன்பிளஸ் ஸ்மார்ட் டி.வி. வெளியாகும் முதல் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி மாடல்கள் அமேசான் இணையதளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.