ஒன்பதாம் வகுப்பு வரை கட்டாய பாஸ் என்று அறிவிக்க வேண்டும்! – அரசுக்கு ஆசிரியர்கள் கோரிக்கை

ஒன்பதாம் வகுப்பு வரை கட்டாய பாஸ் என்று அறிவிக்க வேண்டும்! – அரசுக்கு ஆசிரியர்கள் கோரிக்கை

கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் மூடப்பட்டு, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் கட்டாய பாஸ் என்று அறிவிப்பு வெளியிட்டு வருகின்றன. இந்த நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன. மாணவர்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியாத, தேர்வுக்கு அவர்களைத் தயார் செய்ய முடியாத நிலை உள்ளதாக தமிழக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் கட்டாய பாஸ் என்ற அறிவிப்பைத் தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் மூடப்பட்டு, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் கட்டாய பாஸ் என்று அறிவிப்பு வெளியிட்டு வருகின்றன. இந்த நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன. மாணவர்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியாத, தேர்வுக்கு அவர்களைத் தயார் செய்ய முடியாத நிலை உள்ளதாக தமிழக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

tn-school-teachers

ஏப்ரல் மாதத்தில் தேர்வுகள் நடத்தப்பட்டு விடுமுறை அளிக்கப்படுவது அரசுப் பள்ளிகளில் வழக்கம். ஆனால், மார்ச் 31ம் தேதி வரை அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறியுள்ளவர்கள் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. புதிது புதிதாக கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனைக்கு வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், ஏப்ரல் மாதத்திலும் பள்ளிகள் செயல்படுமா என்ற சந்தேகம் உள்ளது. 

students-writing-exam

கடைசி நேரத்தில் மாணவர்களைத் தேர்வுக்கு தயார் செய்வது என்பது ஆசிரியர்களுக்கு சிரமமான காரியமும் கூட. 9ம் வகுப்புக்குப் பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் 10ம் வகுப்பு விடைத்தாளைத் திருத்த அரசு மையங்களுக்கு செல்ல வேண்டும். அப்படி இருக்கையில் தேர்வுகளை நடத்துவது கடினம் என்று ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இவற்றை எல்லாம் ஆய்வு செய்து நல்ல முடிவை அரசு அறிவிக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கைவிடுத்துள்ளன.