ஒத்துழைப்பு இன்றி திணறும் பா.ஜ.க தலைவர் முருகன்! – எச்.ராஜா உள்ளிட்ட தலைவர்களுக்கு நட்டா வார்ணிங்

ஒத்துழைப்பு இன்றி திணறும் பா.ஜ.க தலைவர் முருகன்! – எச்.ராஜா உள்ளிட்ட தலைவர்களுக்கு நட்டா வார்ணிங்

தமிழக பா.ஜ.க தலைவராக எச்.ராஜா வருவார் என்று பா.ஜ.க-வினர் ஆவலாக காத்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு இணையாக இணைய மீம்ஸ் கிரியேட்டர்களும் எச்.ராஜா வருகைக்காக காத்திருந்தனர். ஆனால், யாரும் எதிர்பாராத நிலையில் எல்.முருகனை தலைவராக நியமித்தார் பா.ஜ.க தேசிய தலைவர் நட்டா. எல்.முருகன் தமிழக அளவில் கட்சியினர் மத்தியிலே கூட அறிமுகம் இல்லாதவர். தேசிய அளவில் பொறுப்பிலிருந்தாலும் தமிழக அளவில் அவர் தள்ளியே இருந்தார். தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவராக இருந்தாலும் தமிழிசை, எச்.ராஜா அளவுக்கு அவரால் பப்ளிசிட்டி பெற முடியவில்லை.

தமிழக பா.ஜ.க தலைவராக நியமிக்கப்பட்ட முருகனுக்கு எந்த ஒரு நிர்வாகியும் ஒத்துழைப்பு அளிக்காமல் ஒதுங்கியிருப்பதாகவும் அதனால், அனைவரையும் தூக்கிவிடுவேன் என்று நட்டா, அமித்ஷா எச்சரிக்கைவிடுத்தள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழக பா.ஜ.க தலைவராக எச்.ராஜா வருவார் என்று பா.ஜ.க-வினர் ஆவலாக காத்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு இணையாக இணைய மீம்ஸ் கிரியேட்டர்களும் எச்.ராஜா வருகைக்காக காத்திருந்தனர். ஆனால், யாரும் எதிர்பாராத நிலையில் எல்.முருகனை தலைவராக நியமித்தார் பா.ஜ.க தேசிய தலைவர் நட்டா. எல்.முருகன் தமிழக அளவில் கட்சியினர் மத்தியிலே கூட அறிமுகம் இல்லாதவர். தேசிய அளவில் பொறுப்பிலிருந்தாலும் தமிழக அளவில் அவர் தள்ளியே இருந்தார். தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவராக இருந்தாலும் தமிழிசை, எச்.ராஜா அளவுக்கு அவரால் பப்ளிசிட்டி பெற முடியவில்லை.

pon-radhakrishnan-and-h-raja

ராஜா, பொன் ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், கருப்பு முருகானந்தம், எஸ்.வி.சேகர், ராகவன், நைனார் நாகேந்திரன் என்று பலரும் தலைவர் பதவிக்கு முயற்சி செய்து கொண்டிருக்க, போட்டியிலேயே இல்லாத முருகன் தலைவரானது பலருக்கும் அதிர்ச்சி. இந்த அதிருப்தியை முருகன் தலைவராக பதவியேற்ற அன்று வெளிப்பட்டது. எச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன் என எந்த ஒரு தலைவர் முகத்திலும் உற்சாகமில்லாமல் அமர்ந்திருந்தனர். கட்சிப் பணிகளிலும் ஆர்வமின்றி உள்ளனர்.
இதற்கிடையே கொரோனா வைரஸ் பாதிப்பு வந்துவிட்டதால் கட்சி இருக்கிறதா இல்லையா என்று தெரியாத அளவுக்கு அமைதி நிலவுகிறது. தமிழிசை தலைவராக இருந்தபோது எதற்கெடுத்தாலும் கருத்து கூறி எரிச்சலைக் கிளப்புவார்… தமிழிசை இல்லாத செய்தி இல்லை என்ற அளவுக்கு வாண்டடாக வண்டியில் ஏறுவார். ஆனால், முருகன் வாய் திறக்காமல் அமைதியாக உள்ளார். நிர்வாகிகள் ஒத்துழைப்பு இல்லாதது, கொரோனா பீதி போன்ற காரணங்களால் செயல் பட முடியாமல் முடங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

jp-natta-and-amit-shah

தமிழக பா.ஜ.க தலைவர்கள், நிர்வாகிகளின் செயல்பாடு பற்றி தேசிய தலைவர் நட்டாவுக்கும் முன்னாள் தலைவர் அமித்ஷா காதுகளுக்கும் முருகன் போட்டுள்ளார். மத்தியப் பிரதேச கலாட்டா, கொரோனா பீதியால் பரபரப்பிலிருந்த தலைவர்கள் முருகனின் பேச்சைக் காதுகொடுத்துக் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. வெயிட் செய்யுங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று மட்டும் கூறியதாக தெரிகிறது. மத்தியப் பிரதேசத்தில் வெற்றிகரமாக ஆட்சியைக் கவிழ்த்துவிட்டதால் தற்போது தமிழக தலைவர்களை அழைத்துப் பேசி வருகிறாராம் நட்டா. தமிழகத்தில் கட்சியை வளர்க்க முடியவில்லை, தலைவர் பதவிக்கு இத்தனை போட்டியா… ஒழுங்காக வேலை செய்யவில்லை என்றால் விரட்டிவிடுவேன் என்று எச்சரித்தாராம். கொரோனா பீதியை காரணம் காட்டி தலைவர்கள் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது. முருகனுக்கு ஒத்துழைப்பு அளிப்பார்களா, அல்லது புறக்கணிப்பு தொடருமா என்பது வரும் வாரங்களில் தெரியவரும்.