ஒடிஷாவில் 20 கால் விரல், 12 கைவிரலுடன் பிறந்த பெண்… சூனியக்காரி என்று ஒதுக்கிவைத்த கொடூரம்!

 

ஒடிஷாவில் 20 கால் விரல், 12 கைவிரலுடன் பிறந்த பெண்… சூனியக்காரி என்று ஒதுக்கிவைத்த கொடூரம்!

கையில் ஒரு சுண்டு விரல் அதிகமாக இருந்தாலே அவர்களை வித்தியாசமாக பார்க்கும் நம்முடைய சமுதாயம், 10 விரல் இருந்தால் என்ன செய்யும்?
ஒடிஷாவில் இப்படி ஒரு பெண் சூனியக்காரி என்று ஒதுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிஷாவின் கஞ்சம் மாவட்டம் கடப்படா கிராமத்தைச் சேர்ந்த 63 வயது மூதாட்டி நாயக் குமாரி. இவருக்கு காலில் 20 விரல்களும், கையில் 12 விரல்களும் உள்ளன.

கையில் ஒரு சுண்டு விரல் அதிகமாக இருந்தாலே அவர்களை வித்தியாசமாக பார்க்கும் நம்முடைய சமுதாயம், 10 விரல் இருந்தால் என்ன செய்யும்?

old women

ஒடிஷாவில் இப்படி ஒரு பெண் சூனியக்காரி என்று ஒதுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிஷாவின் கஞ்சம் மாவட்டம் கடப்படா கிராமத்தைச் சேர்ந்த 63 வயது மூதாட்டி நாயக் குமாரி. இவருக்கு காலில் 20 விரல்களும், கையில் 12 விரல்களும் உள்ளன. இதனால், சூனியக்காரி என்று முத்திரைகுத்தப்பட்டு ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளார் கிராம மக்கள். இது குறித்து குமாரி கூறுகையில், “நான் பிறக்கும்போது எனக்கு 20 கால் விரல்களும், 12 கைவிரல்களும் இருந்தன. எங்கள் குடும்பம் மிகவும் ஏழ்மையானது.

old women

இதனால், அப்போது எனக்கு சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டனர். இதனால், சின்ன வயதிலேயே அண்டை வீட்டார், கிராமத்தினர் என்னை சூனியக்காரியாகவே கருதினார்கள். இதனால், நான் வெளியே வருவதையே நிறுத்திவிட்டேன். வீட்டைவிட்டு எங்கேயும் சென்றது இல்லை” என்றார்.
இது குறித்து மருத்துவர் பினாக்கி மஹோந்தி என்பவர் கூறுகையில், “கையில் கூடுதலாக இரண்டு விரல்கள் இருப்பது அதிசயம் இல்லை. ஆனால், கையில் 12 விரல்கள், காலில் 20 விரல்கள் இருப்பது மிகவும் அரிதானது.

old women

மரபணுவில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம்” என்றார.
இந்த தகவலை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சமூகத்தால் ஒடுக்கப்பட்ட அந்த மூதாட்டி மீது பலரும் பரிவுகொண்டு கமெண்ட் செய்து வருகின்றனர். அவருக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.