ஒசூரில் புகழேந்தி, நெல்லையில் மைக்கேல் ராயப்பன்: தினகரன் அதிரடி!

 

ஒசூரில் புகழேந்தி, நெல்லையில் மைக்கேல் ராயப்பன்: தினகரன் அதிரடி!

ஒசூர் தொகுதி அமமுக வேட்பாளராக வழக்கறிஞர் புகழேந்தி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை: ஒசூர் தொகுதி அமமுக வேட்பாளராக வழக்கறிஞர் புகழேந்தி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மக்களவை தேர்தல்

vote

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் களம் நாடு முழுவதும் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி பேச்சுவார்த்தைகளை  முடித்து வேட்பாளர் பட்டியலை அறிவித்து பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். 

மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியல்

ttv

முன்னதாக அமமுக சார்பில் 24 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலையும், 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலையும் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி  தினகரன் வெளியிட்ட நிலையில்,தற்போது மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. 

ஒசூர் தொகுதியில் புகழேந்தி

ammk

இதில், ஒசூர் தொகுதியில் நடைபெறும் சட்டமன்ற இடைத்தேர்தலில், அமமுகவின் கர்நாடக மாநில கழக செயலாளரும், வழக்கறிஞருமான  புகழேந்தி களமிறங்குகிறார். அதே சமயம் புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் அமமுக சார்பில் என்.தமிழ்மாறன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

வேட்பாளர் பட்டியலில் மாற்றம்

rayappan

அதே சமயம் அமமுக வேட்பாளர் பட்டியலில் மாற்றமும் ஏற்பட்டுள்ளது. அதாவது,  திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஞான அருள்மணிக்கு பதிலாக முன்னாள் எம்.எல்.ஏ மைக்கேல் ராயப்பன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

இதையும் வாசிக்க: சுவாரசியமான தேர்தல் களம்: தாண்டியா ஆடிய செல்லூர் ராஜு: தூங்கி வழிந்த அதிமுக எம்பி!