ஐ.நா.வின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தானின் கட்டுகதைகளுக்கு பதிலடி கொடுத்த இந்தியா

 

ஐ.நா.வின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தானின் கட்டுகதைகளுக்கு பதிலடி கொடுத்த இந்தியா

ஐ.நா.வின. மனித உரிமை கவுன்சிலில் பாகிஸ்தான் கட்டுகதைகளுக்கு இந்தியா சரியான பதிலடி கொடுத்தது.

சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் ஐ.நா.வின் மனித உரிமைகள் அமைப்பின் 42வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகம்மது குரேஷி பேசுகையில், காஷ்மீரில் அரசியல் தலைவர்கள் காவலில் வைக்கபட்டுள்ளனர். பெரிய அளவில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுகிறது அங்கு சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என என வலியுறுத்தினார்.

ஐ.நா.வின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம்

பாகிஸ்தானின் பொய் குற்றச்சாட்டுகளுக்கு இந்தியா சரியான பதிலடி கொடுத்தது. இந்திய பிரதிநிதி விஜய் தாக்கூர் சிங் பேசுகையில் கூறியதாவது: ஜம்மு அண்டு காஷ்மீர் தொடர்பாக மத்திய அரசு மேற்கொண்ட முடிவுக்கு பிறகு, எல்லை தாண்டிய தீவிரவாத அச்சுறுத்தலிருந்து அந்த பகுதி மக்களை பாதுகாக்க தற்காலிக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவைப்பட்டது. கடுமையான சூழ்நிலைக்கு மத்தியிலும், ஜம்மு அண்டு காஷ்மீரின் நிர்வாகம், அடிப்படை சேவைகள், அத்தியாவசிய பொருட்கள் சப்ளை, நிறுவனங்கள் இயல்பாக செயல்பட மற்றும் மொத்த இணைப்புகளையும் உறுதி செய்து வருகிறது. ஜனநாயக நடைமுறைகள் தொடங்கப்பட்டு விட்டன.

ஷா முகமது குரேஷி

நாட்டின் மற்ற பகுதிகள் பெறும் அரசியலமைப்பின் ஆதாயத்தை ஜம்மு அண்டு காஷ்மீர் மக்களும் பெறுவதை உறுதி செய்ய சிறப்பு அந்தஸ்து நீக்கம் அவசியம். இதனால் சொத்துரிமை, தேர்தல்களில் போட்டியிடும் உரிமை உள்பட பல்வேறு விஷயங்களில் பாலின பாகுபாடு முடிவுக்கு வந்தது. நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட பிற சட்டங்களைப் போன்றுதான், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கமும் இறையாண்மை நடவடிக்கை என்பதை நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம். இது முழுக்க முழுக்க இந்தியாவின் உள்விவகாரம்.

எந்த நாடும் தங்களது உள்விவகாரத்தில் மற்ற நாடுகள் தலையிடுவதை விரும்பாது. இந்த விவகாரத்தில் மூன்றாவது நாடு மத்தியஸ்தம் செய்வதை நிச்சியமாக இந்தியா ஏற்றுக்கொள்ளாது. இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும்,  ஜம்மு அண்டு காஷ்மீரில் பல்வேறு கட்டுப்பாடுகள் படிப்படியாக விலக்கப்படுவதையும் அந்த கூட்டத்தில் தெளிவாக எடுத்துரைத்தார்.