ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இன்று காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்ப வாய்ப்பு

 

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இன்று காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்ப வாய்ப்பு

ஜெனிவாவில் இன்று நடைபெறும் ஐ.நா.வின் மனித உரிமைகள் கவுன்சில் அமர்வில், காஷ்மீர் விவகாரத்தை முன்வைத்து இந்தியா மீது வீண் பழியை பாகிஸ்தான் சுமத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காஷ்மீர் விவகாரத்தை ஐக்கிய நாடுகள் (ஐ.நா.) சபை உள்பட பல உலக அமைப்புகளின் கூட்டங்களில் பாகிஸ்தான் எழுப்பியது. மேலும் இந்தியாவுக்கு எதிராக சில பொய்யான ஆதாரங்கள அளித்து கடைசியில் அந்த நாடு அசிகங்கப்படடது. இந்தியா மீதான பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளை பெரும்பாலான உலக நாடுகள் கண்டு கொள்ளவில்லை. இருப்பினும், தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உலக அமைப்புகளில் இந்தியா மீது பொய் குற்றச்சாட்டுக்களை கூறுவதை பாகிஸ்தான் வாடிக்கையாக வைத்துள்ளது.

ஷிரீன் மசாரி

இந்நிலையில் ஜெனிவாவில் இன்று நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானின் வெளியுறவு துறை அமைச்சர் முகமது குரேஷி கடைசி நேரத்தில் அந்த கூட்டத்தில் பங்கேற்பதை ரத்து செய்துள்ளார். அதனால் அவருக்கு பதிலாக அந்நாட்டின் மனித உரிமைகள் அமைச்சர் ஷிரீன் மசாரி பங்கேற்க உள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில்

இன்று நடைபெறும் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் மசாரி பேசும்போது, காஷ்மீரில் மனித உரிமைகள் மீறல்கள் நடைபெறுவதாக இந்தியா மீது குற்றச்சாட்டி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், மனித உரிமைகள் கவுன்சிலில் பாகிஸ்தானின் நட்பு நாடுகளான மலேசியா மற்றும் துருக்கியின் ஆதரவு அந்நாட்டுக்கு இருக்காது. மேலும், பாகிஸ்தானின் அனைத்து வானிலை கூட்டாளியான சீனாவும் இந்த கவுன்சிலில் உறுப்பினர் கிடையாது. பாகிஸ்தான் அமைச்சர் இன்று கவுன்சில் இந்தியா மீது குற்றச்சாட்டினால், அதற்கு இந்திய பிரதிநிதி விகாஸ் ஸ்ரூப் (மேற்கு) நாளை தனது பதில் உரையில் தக்க பதிலடி கொடுப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.