ஐஸ்வர்யாவை காதலிக்கும் மகத்: மாறிப்போன பிக் பாஸ் ஜோடி!

 

ஐஸ்வர்யாவை காதலிக்கும் மகத்: மாறிப்போன பிக் பாஸ் ஜோடி!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ஐஸ்வர்யா தத்தா மற்றும் மகத் ஆகியோர் புதிய ரொமாண்டிக் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ஐஸ்வர்யா தத்தா மற்றும் மகத் ஆகியோர் புதிய ரொமாண்டிக் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனை விட இரண்டாவது சீசன் டல்லாக இருந்தபோதிலும், அடிக்கடி ஏதாவது செய்து சர்ச்சையை கிளப்புபவர் நடிகை ஐஸ்வர்யா. மக்கள் மனதில் பெரிதாக நல்ல அபிப்ராயத்தை பெறாத போதிலும், ஐஸ்வர்யா பிக் பாஸ் 2வது சீசனின் ரன்னராக வெற்றி பெற்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து ஐஸ்வர்யா, திரைப்படங்களில் நடிக்க கதைகள் கேட்டு வருவதாக கூறப்பட்டது. இதனிடையே, நடிகர் சிம்புவின் அடுத்தப்படத்தில் ஐஸ்வர்யா தத்தா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் அட்ராசிட்டி செய்து மக்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட மகத்துடன் ஐஸ்வர்யா ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

mahat

அறிமுக இயக்குநர் பிரபு ராம் என்பவர் இயக்கும் இப்படம் ரொமாண்டிக் காமெடி படம் என்றும், இதன் படப்பிடிப்பு பணிகள் வரும் டிசம்பர் மாதம் துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் வடசென்னை பகுதியை சேர்ந்த மகத், பணக்கார பெண்ணான ஐஸ்வர்யாவை எப்படி காதலிக்கிறார் என்பதை மையப்படுத்தி உருவாகவிருப்பதாக இயக்குநர் பிரபு ராம் தெரிவித்துள்ளார்.

mahat

ஏற்கனவே பிக் பாஸ் ஜோடியான ஹரிஷ் கல்யாண்-ரைசா வில்சன் நடித்த ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் இணை பிரியா நண்பர்களாக சுற்றித் திரிந்த ஐஸ்வர்யா-மகத் நடிக்கும் காதல் திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.