ஐராவத்தத்தை அனுப்பி,சுயம்புலிங்கத்தை பெயர்த்து எடுத்துவர சொன்ன இந்திரன்…ஏன் தெரியுமா!? பாடல் பெற்ற தலங்கள் வரிசை-9,சாய்க்காடு

 

ஐராவத்தத்தை அனுப்பி,சுயம்புலிங்கத்தை பெயர்த்து எடுத்துவர சொன்ன இந்திரன்…ஏன் தெரியுமா!? பாடல் பெற்ற தலங்கள் வரிசை-9,சாய்க்காடு

சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் திருவெண்காடு தாண்டி,3 கி.மீ தொலைவில் இருக்கிறது சாயாவனம். இறைவன் சாயாவனேஸ்வரர் . இவருக்கு இந்திரேசுவரர் என்று இன்னொரு பெயரும் வழங்குந்கிறது,அம்மை குயிலினும் நன்மொழியாள்.

சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் திருவெண்காடு தாண்டி,3 கி.மீ தொலைவில் இருக்கிறது சாயாவனம். இறைவன் சாயாவனேஸ்வரர் . இவருக்கு இந்திரேசுவரர் என்று இன்னொரு பெயரும் வழங்குந்கிறது,அம்மை குயிலினும் நன்மொழியாள்.

70 சென்ட்  பரப்பளவில் இரண்டு பிரகாரங்களுடன் அமைந்திருக்கிறது என்கிற சாய்க்காடு என்கிற சாயாவனம்.சாய் என்பதற்கு ‘கோரை’ என்று பொருள். அந்தக் கோரை மிகுதியாய் இருந்ததால் சாய்க்காடு என்று பெயராயிற்று.

கோப்புபடம்

ஐராவதம்,காவிரி,சங்குமுகம் என்று மூன்று தீர்த்தங்கள் இருக்கின்றன.காசிக்கு சமமானதாக கருதப்படும் 6 தலங்களில் இதுவும் ஒன்று.திருவெண்காடு, திருவையாறு, திருவிடைமருதூர், திருவாஞ்சியம்,மயிலாடுதுறை ஆகியவை மற்ற ஐந்து தலங்கள்.

இந்த கோவிலின் தலபுராணத்தில் இரண்டு சுவையான கதைகள் உள்ளன. இயற்பகை ஐயனார் என்கிற சிவபக்தர் இந்த ஊரில் வாழ்ந்தவர்.அவர் யார் எது கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் தந்துவிடுவாராம்.ஒருநாள் இறைவன் ஒரு சிவனடியாராக,இயற்பகையாரிடம் வந்து எனக்கு உன் மனைவி வேண்டும் என்று கேட்க,அவரும் ஒரு வார்த்தை பேசாமல் மனைவியை அழைத்து ஒப்படைத்து விட்டார்.

கோப்புபடம்

ஆனால் இறைவனோ,’ நான் உன் மனைவியை அழைத்துக்கொண்டு போவதை உங்கள் உறவினர்கள் தடுத்தால்,அதனால் ஊர் எல்லை வரை காவலுக்கு வா’ என்றார்.இயற்பகை நாயனாரும் கையில் ஒரு வாளுடன் புறப்பட்டார்.எதிரில் தடுக்க முயன்ற உறவினர்களை வெட்டிப்போட்டு விட்டு, ஊர் எல்லையில் சிவனடியார் வேடத்தில் இருந்த இறைவன்,இனி நீ போகலாம் என்று சொன்னதும் இயற்பகையார் வீடு நோக்கி நடக்கத் துவங்கினார்.அப்போது உமாதேவி வானத்தில் தோன்றி,அவரது பக்தியை மெச்சி,இயற்பகையாரின் மனைவியை திரும்பக்  கொடுத்ததுடன் இறந்த உறவினர்களின் உயிரையும் மீட்டுதந்தாராம்.

கோப்புபடம்

இன்னொரு கதை,இந்திரனைப் பற்றியது.இந்திரனின் தாய் இந்த சாயாவனேஸ்வரரின் பக்த்தையாம்.தன் தாயை மகிழ்விக்க நினைத்த இந்திரன்,தனது வாகனமான.ஐராவத்தத்தை அனுப்பி,சாய்க்காட்டில் இருந்த சுயம்புலிங்கத்தை பெயர்த்து எடுத்துவர சொன்னானாம்.
ஐராவதமும் சாய்க்காட்டுக்கு வந்து, தந்தந்தங்களால் சுயம்புலிங்கத்தை பெயற்க முயற்சித்தபொழுது உண்டான பள்ளம்தான் இப்போது ஐராவத தீர்த்தம் என்று அழைகப்படுகிறது.இதனால் கோபமடைந்த இறைவன் ஆதிசேடனுக்கு உத்தரவிட,ஆதிசேடன் முடியிலிருந்த நாகமணியின் ஒளியால் இந்திரன் கண்பார்வை குறைந்து போய்,பிறகு சாய்காட்டு இறைவனை வழிபட்டு கண்பார்வையை திரும்பப் பெற்றானாம்.இதனால்தான் இத்தல இறைவனுக்கு இந்திரேசுவரர் என்ற பெயர் ஏற்பட்டதாம்.

கோப்புபடம்

சம்பந்தர்,அப்பர்,ஐயடிகள் காடவர்கோன் ஆகியோர் இத் தலத்து இறைவனை பாடியுள்ளனர்.13 கல்வெட்டுகள் உள்ளன,அவை இவ்வூரை ‘ ராஜராஜ வளநாட்டு நாங்கூர் நாடு ஊர் காவிரிப்பூம்பட்டினத்து திருச்சாய்க்காடு’ என்று சொல்கின்றன.

கோப்புபடம்

தினமும் நான்குகால பூஜை நடைபெறுகிறது. இந்திரவிழா,ஐப்பசி நாயன்மார்கள் உற்சவம் ஆகியவை இங்கு நடைபெறும் முக்கிய விழாக்களாகும்.