ஐப்பசி மாத விருச்சிக ராசி பலன்கள்

 

ஐப்பசி மாத விருச்சிக ராசி பலன்கள்

விருச்சிக ராசிக்கு ஜோதிட அடிப்படையில் ஐப்பசி மாதம் எத்தகைய நல்ல பலன்களை தரப்போகிறது என்பதினை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம்.

விருச்சிக ராசிக்கு செவ்வாய் அதிபதியாக இருப்பதால் எந்த ஒரு காரியத்திலும் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாக இருப்பார்கள்.முன்கோபம் இவர்களது உடன் பிறந்த ஒன்றாகும்.உங்கள் ராசிக்கு 12 –ல் சூரியன், சுக்கிரன்; 12,1 –ல் புதன்; 1-ல் குரு; 2-ல் சனி; 3 –ல் செவ்வாய், கேது; 9-ல் ராகு உள்ளனர்.

muruganghj

விருச்சிக ராசிக்கு இந்த மாதம் நல்ல மாற்றங்கள் இருக்கும். இனிமேல் நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். ராசியில் இருக்கும் குரு சோதனைகளை தடுத்து நிறுத்தி உங்களை பாதுகாப்பார் என்பதால் எதிலும் முட்டுக்கட்டைகளை சந்தித்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்தமாதம் நல்வழி திறக்கும்.

இனிமேல் எந்த பிரச்னைகளும் இல்லாமல் வாழ்க்கை சுமுகமாகச் செல்லும். இதுவரை இருந்த எதிர்மறை பலன்கள் உங்களை விட்டு விலகுவதை விருச்சிகத்தினர் உணரும் மாதம் இது.

ஐப்பசி மாதம் விருச்சிக  ராசிக்கு ஏமாற்றங்களையோ, நெருக்கடிகளையோ தராத மாதமாகவே இருக்கும். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.  இதுவரை எல்லா விஷயங்களிலும் இருந்து வந்த தடைகள் விலகும்.

murugangj

அதிர்ஷ்டம் இனி கை கொடுக்கும்.உங்களின் மனவலிமை நன்றாக இருக்கும். எதையும் சமாளிக்கலாம் என்ற தைரியம் பிறக்கும். சமாளிக்கவும் செய்வீர்கள். மற்றவர்களைப் போல ஒரு அதிர்ஷ்டமான வாழ்க்கைக்கு திரும்புவீர்கள். இனி எல்லாம் உங்களுக்கு சுகம்தான்.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு எதிர்பார்த்தபடியே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத் தாகும். நியாயமாக உங்களுக்குக் கிடைக்கவேண்டிய பாராட்டுகள் தடையின்றி கிடைக்கும்.சக கலைஞர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.

மாணவ,மாணவியர்க்கு பாடங்களில் கூடுதல் கவனம் தேவைப்படும். கஷ்டப்பட்டு படித்தால்தான், பாடங்களில் நல்ல மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெற முடியும்.

muruganjk

அதிர்ஷ்ட எண்கள் : 1,3,6,9

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய்,வியாழன்,வெள்ளி

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் சிவப்பு

சந்திராஷ்டம நாட்கள் : நவ:24,25

பரிகாரம்: தினசரி கந்த குரு கவசம் கூறுவதும் அருகில் உள்ள முருகன் ஆலயத்திற்க்கு சென்று வருவதும் உங்களது வாழ்வில் வெற்றியை தரும்.