ஐப்பசி மாத ரிஷப ராசி பலன்கள்  

 

ஐப்பசி மாத ரிஷப ராசி பலன்கள்  

ரிஷப ராசிக்கு ஐப்பசி மாதம் எத்தகைய நல்ல பலன்களை தரப்போகிறது என்பதினை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம்.

ரிஷப  ராசிக்கு அதிபதியாக சுக்கிரன் விளங்குவதால் நீங்கள் மிகவும் அழகும்,வசீகரமும் உடையவர்களாக விளங்குவீர்கள் உங்கள் ராசிக்கு 6 –ல் சூரியன், சுக்கிரன் 6, 7-ல் புதன் 7-ல் குரு 8-ல் சனி 9-ல் செவ்வாய், கேது 3-ல் ராகுவும் உள்ளனர்.

rishabam

ஐப்பசி மாதம் முழுவதும் ரிஷபநாதன் சுக்கிரன் ஆறில் அமர்ந்து ஆட்சிவலு அடைவது உங்களுக்கு நன்மைகளைத் தரும் அமைப்பு என்பதால் இந்த மாதம் உங்களின் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் முன்னேற்றங்களும், லாபங்களும், இருக்கும்.

அஷ்டமச் சனி நடந்து கொண்டிருக்கும் போது ராசிநாதன் வலுப்பெறுவதால் எவ்வித பிரச்னைகளையும் சுலபமாகவும், புத்திசாலித்தனத்துடனும் எதிர் கொள்வீர்கள். குறிப்பாக  இளைஞர்களுக்கு எதிர்மறை பலன்கள் நீங்கி, நல்ல பலன்கள் நடக்கும்.

dimond

மாதப் பிற்பகுதியில் உறவினர்கள் வகையில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட சாத்தியம் உள்ளதால், பொறுமையுடன் இருப்பது மிகவும் அவசியம். கேது சாதகமாக இல்லாத காரணத்தினால் கணவன்  மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும்.

புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டு. மாதத்தின் பிற்பகுதியில் எதிரிகளால் பிரச்னைகளும், கடன் தொல்லைகளும் ஏற்படக்கூடும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சிலருக்கு வெளியூர், வெளி மாநிலப் புண்ணியத் தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு உண்டாகும்.

lakshmi

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு புதுப் புது வாய்ப்புகள் கதவைத் தட்டும். பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

மாணவ மாணவியர்க்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்கள் மற்றும்

பெற்றோர்களின் பாராட்டுகள் கிடைக்கும். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும்.

 

அதிர்ஷ்ட எண்கள் : 2,3,6,9

 

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் மற்றும் வெள்ளி

 

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

சந்திராஷ்டம நாள்கள்: நவ: 11, 12

 

பரிகாரம்: செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அருகில் உள்ள அம்மன் ஆலயங்களுக்கு சென்று பால் அபிஷேகம் செய்வது மிகுந்த நன்மை பயக்கும்.