ஐப்பசி மாத சிம்ம ராசி பலன்கள்

 

ஐப்பசி மாத சிம்ம ராசி பலன்கள்

சிம்ம ராசிக்கு ஐப்பசி மாதம் எத்தகைய நல்ல பலன்களை தரப்போகிறது என்பதினை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம்.

சிம்ம ராசிக்கு அதிபதியாக சூரியன் விளங்குவதால் நீங்கள் மிகவும் வைராக்கியம் ,மற்றும் நேர்மையான குணம் உடையவர்கள்  உங்கள் ராசிக்கு 3 –ல் சூரியன், சுக்கிரன்; 3, 4 –ல் புதன்; 4-ல் குரு; 5-ல் சனி; 6-ல் செவ்வாய், கேது; 12-ல் ராகு உள்ளனர்.

சிம்மநாதன் சூரியன் மாதம் முழுவதும் நீசம் பெறுவது சிறப்பான நிலை அல்ல என்றாலும், அவர் பெரும்பகுதி நாட்கள் நீசபங்க அமைப்பில் இருப்பதால் கெடுதல்கள் எவையும் உங்களை அணுகாது என்பது உறுதி.

simmama

ஏழில் அமர்ந்து ராசியைப் பார்க்கும் செவ்வாயால் பிரச்சனைகளை சுலபமாக சமாளிக்கும் மனோபலமும், சக்தியும் உங்களுக்கு கிடைக்கும் என்பதால் சிம்ம ராசிக்கு பின்னடைவுகள் எதையும் சொல்வதற்கு இல்லை. பெண்கள் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு இந்த மாதம் லாபம் உண்டு.

தையல் கலைஞர்கள் சந்தோஷப்படும் அளவிற்கு இந்த மாதம் வருமானம் உண்டு. வேலைக்கு செல்லும் மனைவியால் உங்களுக்கு உதவிகள் இருக்கும். சிலருக்கு பிடிக்காதவர்களிடம் இருந்து பணவரவு கிடைக்கும். 

simmamg

பிரச்சினைகள் எதுவும் இருக்காது. வெளிநாட்டில் இருந்து பணம் வரும். சகோதரர்களால் நன்மை உண்டு. தந்தைவழி உறவினர்கள் உதவுவார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் பணவிவகாரங்கள் இந்த மாதம் முடியும். சிம்மத்திற்கு இனி சிறப்புகள் மட்டுமே நடை பெற உள்ளது.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு நல்ல நல்ல வாய்ப்புகளும், தாராளமான பணவரவும் கிடைக்கும். பொது நிகழ்ச்சிகளில் கௌரவிக்கப்படுவீர்கள். ரசிகர்களிடம் புகழும் செல்வாக்கும் அதிகரிக்கும்.

maanikk

மாணவ மாணவியர்க்கு, படிப்பில் ஆர்வம் குறையக்கூடும். ஆனாலும் உடனே சுதாரித்துக்கொண்டு பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். ஆசிரியர்களின் ஆலோசனைகள் பயன் தருவதாக இருக்கும்.

அதிர்ஷ்ட எண்கள் : 1,3,6,9

அதிர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, செவ்வாய், வியாழன்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு, மஞ்சள்.

சந்திராஷ்டம நாள்கள்: நவ: 19,20

பரிகாரம்: தினமும் சூர்ய நமஸ்காரம் செய்வதும் அருகில் இருக்க கூடிய சிவன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வதும் வாழ்வில் சகல ஐஸ்வர்யங்களையும் ஏற்படுத்தி தரும்.