ஐபிஎல் ஏலத்தில் இந்திய வீரர்களுக்கு பாரபட்சம் பார்க்கப்படுகிறதா? கடுப்பில் ரசிகர்கள்!

 

ஐபிஎல் ஏலத்தில் இந்திய வீரர்களுக்கு பாரபட்சம் பார்க்கப்படுகிறதா? கடுப்பில் ரசிகர்கள்!

2020 ஐபிஎல் போட்டிக்கான வீரா்கலின் ஏலப்பட்டியல் வெளியிடப்பட்டது. ஏலத்தின் அதிகபட்ச தொகையான ரூ.2 கோடி மதிப்பில் ஒரு இந்திய வீரா் கூட இல்லாததால் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.

2020 ஐபிஎல் போட்டிக்கான வீரா்களின் ஏலப்பட்டியல் வெளியிடப்பட்டது. ஏலத்தின் அதிகபட்ச தொகையான ரூ.2 கோடி மதிப்பில் ஒரு இந்திய வீரா் கூட இல்லாததால் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.

2020 ஆம் ஆண்டு 13வது ஐபிஎல் சீசன் 7 கொல்கத்தாவில் வருகிற 19ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த ஏலத்தில் 73 இடங்கள் மட்டுமே நிரப்ப இயலும். 

இந்த இடங்களுக்கு சுமார் 971 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர். வீரர்களுக்கான அதிகபட்ச ஆரம்ப விலையாக இருக்கும் 2 கோடி ரூபாய் வரம்பில் ஒரு இந்திய வீரர் கூட இடம் பெறாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டு வீரா்களான பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேஸல்வுட், கிறிஸ் லீன், மிச்செல் மாா்ஷ், கிளென் மேக்ஸ்வெல், டேல் ஸ்டெயின், ஏஞ்சலோ மேத்யூஸ் ஆகியோர்களின் பெயா்கள் ரூ.2 கோடி ஆரம்பவிலை பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இரண்டாவது அதிகபட்ச ஏல வரம்பான ரூ.1.5 கோடியில் இந்திய வீரர் ராபின் உத்தப்பா மட்டுமே உள்ளாா். 

IPL 2020 Auction

ரூ. 1 கோடி வரம்பில் சுழல்பந்துவீச்சாளர் பியுஷ் சாவ்லா, ஆல் ரவுண்டா் யூசுப் பதான்,  வேகபந்துவீச்சாளர் ஜெயதேவ் உனதிகட் ஆகிய 3 இந்திய வீரா்கள் இடம்பெற்றுள்ளனர். ரூ.50 லட்சம் வரம்பில் 9 இந்திய வீரா்கள் உள்ளனா்.

2 கோடி மதிப்பில் ஒரு இந்திய வீரர்கள் கூட இல்லையா? இந்திய வீரர்களுக்கு தொடர்ந்து ஐபிஎல் நிர்வாகம் பாரபட்சம் காட்டி வருகிறதா? என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விமர்சனங்களையும் கேள்விகளையும் முன்வைத்துள்ளனர்.

இந்திய வீரர்களின் நிலைகுறித்து வருகிற 19ம் தேதி நடக்கும் ஐபிஎல் ஏலத்தில் போதுதான் தெரியவரும்.