ஐந்து கேமிரா கொண்ட நோக்கியா 9 ஸ்மார்ட் போன் புகைப்படம் இணையத்தில் லீக்கானது

 

ஐந்து கேமிரா கொண்ட நோக்கியா 9 ஸ்மார்ட் போன் புகைப்படம் இணையத்தில் லீக்கானது

நடப்பாண்டு அறிமுகமாகவிருக்கும் ஐந்து கேமிரா கொண்ட நோக்கியா 9 ஸ்மார்ட் போன் புகைப்படம் இணையத்தில் லீக்காகியுள்ளது

டெல்லி: நடப்பாண்டு அறிமுகமாகவிருக்கும் ஐந்து கேமிரா கொண்ட நோக்கியா 9 ஸ்மார்ட் போன் புகைப்படம் இணையத்தில் லீக்காகியுள்ளது.

நோக்கியா 9 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு அறிமுகமாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. சாம்சங் நிறுவனத்தின் மூன்று ரியர் கேமிரா வசதி கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட் போன் மாடல்களும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 4 கேமராக்கள் கொண்ட  சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்களும் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், 5 கேமிரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட் போன் வரவு சந்தையில் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

nokia

இந்த நோக்கியா 9 ஸ்மார்ட் போனில், 3டி ஃபேஸ் அன்லாக் அல்லது இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் தொழில்நுட்பம் வழங்கப்படலாம் எனவும், 5.9 இன்ச் குவாட் ஹெச்.டி. OLED ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், 8 ஜிபி ரேம் மற்றும் OZO ஆடியோ உள்ளிட்டவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

nokia

அதேசமயம், அந்த போனில் இடம்பெற்றிருக்கும் அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த தகவல்களின் படி, புதிய நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் ஐந்து கேமரா லென்ஸ் இடம்பெற்றுள்ளது எனவும், அவை 1-1-3 என்ற அடிப்படையில் பொருத்தப்பட்டு ஒன்றில் எல்.இ.டி. ஃபிளாஷ் இடம் பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐந்து கேமிரா கொண்ட நோக்கியா 9 ஸ்மார்ட் போனின் முன்பக்க புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. அதன்படி, மேல்புறம் மற்றும் கீழ்புறங்களில் தடிமனான பெசல்களை நோக்கியா 9 ஸ்மார்ட்போன் கொண்டிருக்கிறது. யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் போனின் பக்கவாட்டுகளில் வளைந்த வடிவமைப்பை கொண்டுள்ளது. வெளியான புகைப்படத்தின் படி, நோக்கியா 8 சிரோக்கோ போன்றே இந்த போனும் காட்சியளிக்கிறது. மேலும், நோக்கியா 9 மாடலில் நாட்ச் ரக டிஸ்ப்ளே வழங்கப்படாது எனவும் தெரியவந்துள்ளது.