ஐதராபாத்திலிருந்து தமிழகத்திற்கு நடந்து வந்த மாணவர்கள்: ஓடிவந்து உதவிய நாமக்கல் போலீசார்!

 

ஐதராபாத்திலிருந்து தமிழகத்திற்கு நடந்து வந்த  மாணவர்கள்: ஓடிவந்து உதவிய நாமக்கல் போலீசார்!

இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் தேவையில்லாமல் வர வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள்.

கொரோனாதொற்று காரணமாக கடந்த 24 ஆம்  தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நாடு முழுவதும் வரும் மே 3ஆம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா  தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் தேவையில்லாமல் வர வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள்.

tt

 இதனிடையே கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த ஷாஜி மற்றும் மெர்லின் ராஜ் என்ற இளைஞர்கள் இருவரும்  பொறியியல் படிப்பு முடித்துவிட்டு மேற்படிப்பிற்காக ஐதராபாத்தில் தங்கி இருந்துள்ளனர்.  கடந்த 24ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால்  இவர்கள் கல்லூரி மூடப்பட்டுள்ளது.  இதனால் ஷாஜி மற்றும் மெர்லின் ராஜ் இருவரும் அங்கேயே தங்கி இருந்துள்ளனர். ஆனால் தற்போது மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதால் இவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்துள்ளனர்.  அதன்படி கடந்த 15-ம் தேதி ஹைதராபாத்தில் இருந்து நடைபயணமாக கிளம்பிய இவர்கள் தமிழகத்தை நோக்கி வரும் லாரிகளின் மூலம் மிகவும் கஷ்டப்பட்டு சொந்த ஊரை அடைந்துள்ளனர்.  

tt

முதற்கட்டமாக கிருஷ்ணகிரி வரை லாரியில் வந்த இவர்கள் அங்கிருந்து நாமக்கல்லுக்கு மற்றொரு  லாரியில் வந்துள்ளனர்.  பிறகு நாமக்கல்லில் இருந்து மதுரை நோக்கி நடந்து கொண்டிருந்த இந்த இரண்டு இளைஞர்களை பார்த்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் இருவரும் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதிக்கு செல்வது தெரியவந்துள்ளது.  இதையடுத்து மாணவர்களுக்கு உணவளித்து,  தங்க இடமும் அளித்து போலீசார் முட்டை லாரி மூலம் சொந்த ஊருக்கு அவர்கள் செல்ல ஏற்பாடு செய்துள்ளனர்.  அதன் மூலம் இளைஞர்கள்  இருவரும் தங்கள் சொந்த ஊரை அடைந்துள்ளனர்.  தங்கள் சொந்த ஊரை அடைய உதவிய நாமக்கல் காவல் ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் மற்ற போலீசாருக்கு  மாணவர்கள் நன்றி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.