ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல்: விராட் கோலியின் முதல் இடம் காலி!! பும்ராஹ் முன்னேற்றம்

 

ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல்: விராட் கோலியின் முதல் இடம் காலி!! பும்ராஹ் முன்னேற்றம்

ஆஷஸ் தொடரில் மிக அபாரமாக செயல்பட்ட ஸ்டீவ் ஸ்மித் தற்போது முதலிடத்தை பிடித்திருக்கிறார். இவர்கள் இருவருக்கும் ஒரு புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் உள்ளன

டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இருந்த விராத் கோலியை பின்னுக்கு தள்ளி ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். பந்துவீச்சு தரவரிசையில் பும்ரா  முன்னேற்றம் கண்டுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முடிவிற்குப் பிறகு ஐசிசி சில மாற்றங்களுடன் ரேங்க் பட்டியலை வெளியிட்டது. இதில் தொடர்ந்து முதலிடம் வகித்து வந்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் தரவரிசையில் தற்போது இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

bumrah

ஆஷஸ் தொடரில் மிக அபாரமாக செயல்பட்ட ஸ்டீவ் ஸ்மித் தற்போது முதலிடத்தை பிடித்திருக்கிறார். இவர்கள் இருவருக்கும் ஒரு புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் உள்ளன. ஆஷஸ் தொடரில் இரண்டு போட்டிகள் மீதம் இருப்பதால் நல்ல முன்னிலை பெற ஸ்டீவ் ஸ்மித் திற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அதேபோல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக மிக அபாரமாக பந்து வீசிய பும்ரா 7-வது இடத்திலிருந்து 4 இடங்கள் முன்னேற்றம் கண்டு தற்போது தரவரிசை பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். 

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியை திணறடித்த பாட் கமெண்ட்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இவருக்கு அடுத்ததாக தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடா இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

bumrah

டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. அதற்கு அடுத்தடுத்த இடத்தில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இடம் பெற்றிருக்கின்றன.

ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசை

1. ஸ்டீவ் ஸ்மித்
2. விராட் கோலி
3. கேன் வில்லியம்சன்
4. சித்தேஸ்வர் புஜாரா

ஐசிசி டெஸ்ட் பவுலிங் தரவரிசை

1. பாட் கம்மின்ஸ்
2. காகிசோ ரபாடா
3. ஜஸ்பிரித் பும்ரா
4. ஜேசன் ஹோல்டர்
5. ஜேம்ஸ் ஆண்டர்சன்

ஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை

1. இந்தியா
2. நியூஸிலாந்து
3. தென் ஆப்பிரிக்கா
4. இங்கிலாந்து
5. ஆஸ்திரேலியா