ஐசிஐசிஐ வங்கி சிஇஓ சந்தா கோச்சார் ராஜினாமா

 

ஐசிஐசிஐ வங்கி சிஇஓ சந்தா கோச்சார் ராஜினாமா

ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரி பதவியை சந்தா கோச்சார் ராஜினாமா செய்துள்ளார்

மும்பை: ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரி பதவியை சந்தா கோச்சார் ராஜினாமா செய்துள்ளார்.

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, வீடியோகான் நிறுவனத்துக்கு கடந்த 2012-ஆம் ஆண்டில் ரூ.3,250 கோடி கடன் அளித்தது. இந்த கடன் தொகையில் ரூ.2,810 கோடி திருப்பி அளிக்கபப்டாமல் வாராக் கடனாக உள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, வீடியோகான் நிறுவனத்துக்கு அளித்த முறைகேடு நடந்ததாகவும், வங்கியின் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சாரின் குடும்பம் இதனால் ஆதாயம் அடைந்ததாகவும் புகார் எழுந்தது.

வீடியோகான் நிறுவனத்துக்குக் கடன் அளித்ததற்கும் அதன் சி.இ.ஒ.வான சாந்தா கோச்சருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என ஐ.சி.ஐ.சி.ஐ நிறுவனத்தின் தலைவர் எம்.கே சர்மா ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

எனினும், இந்த வழக்கு செபி வசம் சென்றதால், சந்தா கோச்சார் மீது விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. சிபிஐயும் சில மாதங்களுக்கு முன் விசாரணையை துவக்கியது. இந்நிலையில், தனது தலைமை செயல் அதிகாரி பதவியை சந்தா கோச்சார் ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொள்வதாக மும்பை பங்கு வர்த்தக தலைமையகத்தில் ஐசிஐசிஐ நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.

மேலும், ஐசிஐஐ வங்கியின் புதிய தலைமை செயல் அதிகாரியாக சந்தீப் பக்‌ஷி பொறுப்பேற்கவுள்ளதாகவும் அந்த வங்கி அறிவித்துள்ளது.