ஐக்கிய அரபு அமீரகம்: இஸ்லாமியர்கள் பற்றி அவதூறு பரப்பிய இந்தியர் வேலை பறிபோனது!

 

ஐக்கிய அரபு அமீரகம்: இஸ்லாமியர்கள் பற்றி அவதூறு பரப்பிய இந்தியர் வேலை பறிபோனது!

இந்தியாவில் குறிப்பிட்ட அமைப்பின் ஆதரவாளர்கள் இஸ்லாமியர்கள் பற்றி அவதூறு செய்தி பரப்பி வருவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் ஆதரவாளர்கள் பல வெளிநாடுகளில் இருந்துகொண்டு கிறிஸ்தவ, இஸ்லாமியர்கள் பற்றி அவதூறான பதிவுகளை வெளியிட்டு வருவதாக கூறப்பட்டது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இஸ்லாமியர் பற்றிய அவதூறு தகவல் பரப்பிய இந்தியர் ஒருவரின் வேலை பறிபோனதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் குறிப்பிட்ட அமைப்பின் ஆதரவாளர்கள் இஸ்லாமியர்கள் பற்றி அவதூறு செய்தி பரப்பி வருவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் ஆதரவாளர்கள் பல வெளிநாடுகளில் இருந்துகொண்டு கிறிஸ்தவ, இஸ்லாமியர்கள் பற்றி அவதூறான பதிவுகளை வெளியிட்டு வருவதாக கூறப்பட்டது. இப்படி பதிவுகளை வெளியிட்டவர்கள் பற்றி அவர்கள் பணியாற்றும் நிறுவனம், அரசுகளுக்கு இஸ்லாமியர்கள் தகவல் அனுப்ப ஆரம்பித்தனர். இதனால் சில இந்தியர்களின் வேலை பறிபோனதாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் மீண்டும் ஒரு இந்தியரின் வேலை பறிபோய் உள்ளதாக வளைகுடா செய்திகள் தெரிவிக்கின்றன. பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிராஜ்கிஷோர் குப்தா. இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஸ்டீவின் ராக் என்ற நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் நடந்த வன்முறை மற்றும் கொரோனா தொடர்பாக இவர் இஸ்லாமியர்களை குற்றம்சாட்டி தொடர்ந்து தன்னுடைய சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வந்துள்ளார். இது பற்றிய தகவல் இவர் பணியாற்றி வந்த நிறுவனத்துக்கு தெரிவிக்கப்பட்டது.

fired

இதைத் தொடர்ந்து எந்த ஒரு விளக்கமும் கேட்காமல், பிராஜ்கிஷோரின் வேலையை அந்த நிறுவனம் பறித்துள்ளது. இது தொடர்பாக ஸ்டீவின் ராக் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “எங்கள் நிறுவனத்தில் இளம் ஊழியர் ஒருவர் குறிப்பிட்ட சமயத்தவர்களை இழிவாக சித்தரித்து பதிவிட்டு வந்ததால் எந்த விதமான நோட்டீசும் வழங்காமல் உடனடியாக அவரை பணியில் இருந்து நீக்குகிறோம். இனவெறி, வேறுபாட்டை தூண்டும் வகையில் பேசுவோர் சகித்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என்ற அரசின் விதிக்கு உட்பட்டு ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்” என்று கூறியுள்ளது. இந்த செயல் வெளிநாட்டில் இருந்துகொண்டு அவதூறான பதிவுகளை வெளியிட்டு வருபவர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.