ஐஐடி மாணவியின் சாவில் மர்மம்… மாணவியின் செல்போனால் கதிகலங்கும் பேராசிரியர்கள்!

ஐஐடி மாணவியின் சாவில் மர்மம்… மாணவியின் செல்போனால் கதிகலங்கும் பேராசிரியர்கள்!

சென்னை ஐஐடியில் விடுதி அறைகளில் மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கேரளாவைச் சேர்ந்த  ஃபாத்திமா லத்தீஃப் எனும் மாணவி  முதலாம் ஆண்டு மனிதவியல் மற்றும் சமூக அறிவியல் துறையில் பயின்று வந்தார். இவர் தனது துறை ஆசிரியர்களின் உளவியல் தாக்குதலால் மனமுடைந்து சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

iit

தற்கொலை குறித்தான விசாரணையில், ஃபாத்திமா லத்தீஃப் அவருடைய மொபைல் ஃபோனில் எழுதி வைத்த வெவ்வேறு குறிப்புகளில் தனது துறையைச் சார்ந்த மூன்று பேராசிரியர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு,  தான் இறந்தால் அதற்கு இவர்கள் தான் காரணம் என்று குறிப்பிட்டிருக்கிறார். இதற்கு முன்பு அவருடனான உரையாடல்கள் மூலம் மதத்தை வைத்து ஆசிரியர்களால் நிந்தனைக்குள்ளாவதாக தனது குடும்பத்தினருக்கு தெரிவித்திருக்கிறார் ஃபாத்திமா.

fathima

மாணவியின் தற்கொலைக்கான காரணம் தெரியாத நிலையில், ஃபாத்திமாவின் செல்போன் பதிவு முக்கிய தடயமாக கருதப்படுகிறது. இதற்கிடையில் மாணவியின் பெற்றோர் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். மேலும் கேரள அரசு தமிழக போலீசார் நடத்தும் விசாரணையை மேற்பார்வையிட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  ஃபாத்திமா மிகவும் அறிவாளி. வகுப்பில் இதுவரையிலான தேர்வுகள் அனைத்திலும் முதலிடம் பெற்றுள்ளார் என்று அவரது தோழிகள் கூறுகின்றனர். ஃபாத்திமாவின் மரணம் குறித்து அவரது தந்தை அப்துல் லத்தீஃப், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இந்த இறப்பிற்கான நீதி வேண்டும் என்று முறையிட்டுள்ளார்.