ஏழைகளுக்கு உதவ ஆலோசனை வழங்கிய ரகுராம் ராஜன்… எவ்வளவு நேரம் பேசினார் என ஆராய்ச்சி செய்யும் பா.ஜ.க-வினர்!

 

ஏழைகளுக்கு உதவ ஆலோசனை வழங்கிய ரகுராம் ராஜன்… எவ்வளவு நேரம் பேசினார் என ஆராய்ச்சி செய்யும் பா.ஜ.க-வினர்!

கொரோனா பாதிப்பிலிருந்து ஏழை மக்களைக் காப்பாற்ற 65 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்க வேண்டும். நாட்டின் ஜி.டி.பி மதிப்பை ஒப்பிடும்போது இது சிறிய தொகைதான் அரசால் சமாளிக்க முடியும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பிலிருந்து ஏழை மக்களைக் காப்பாற்ற 65 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்க வேண்டும். நாட்டின் ஜி.டி.பி மதிப்பை ஒப்பிடும்போது இது சிறிய தொகைதான் அரசால் சமாளிக்க முடியும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். ரகுராம் ராஜன் எவ்வளவு நேரம் பேசினார் என்று பா.ஜ.க தொண்டர்கள் உண்மை கண்டறியும் ஆய்வை நடத்தி வருகின்றனர்.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி காணொலி வாயிலாக பொருளாதார பாதிப்பு குறித்து பல்வேறு பொருளாதார நிபுணர்களுடன் பேசி வருகிறார். முதல்கட்டமாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனுடன் பொருளாதார பாதிப்பு குறித்து கணொலி வாயிலாக ஆலோசித்தார். அப்போது “தற்போதைய சூழ்நிலையில் ஏழைகளுக்கு உதவ எவ்வளவு பணம் தேவைப்படும்” என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். 

rahul-gandhi.jpg

இதற்கு பதில் அளித்த ரகுராம் ராஜன், “கொரோனா நோய்த்தொற்று பாதிப்பால் வேலைவாய்ப்பை இழந்து வருமானமின்றி இருக்கும் ஏழைகளுக்கு உணவளிக்க உடனடியாக இந்தியாவுக்கு ரூ.65,000 கோடி தேவைப்படும். இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தியின் மதிப்பு ரூ.200 லட்சம் கோடி. இதில் ரூ.65,000 கோடிதான் ஏழைகளுக்கு ஒதுக்கக் கேட்கிறோம். இது பெரிய தொகை அல்ல. உள்நாட்டு மொத்த உற்பத்தியைக் கருத்தில் கொண்டு, அதைச் செய்ய முடியும்.

coorna-workers

என்னைப் பொறுத்தவரை மூன்றாவது நான்காவது ஊரடங்கு வந்தால் பொருளாதாரம் பேரழிவுக்குச் செல்லும். மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும் போது நிதி மற்றும் பணமதிப்பு நமக்கு அளவானதுதான். எனவே, சிறந்த வழியில் பொருளாதாரத்தை நாம் எவ்வாறு மக்களுக்கு திறந்துவிடப் போகிறோம் என்பதை முடிவு செய்ய வேண்டும்.
நாம் பொருளாதாரத்தை திறந்துவிடும் போது ஆங்காங்கே கொரோனா தொற்று பாதித்தவர்களின் வருகை இருக்கத்தான் செய்யும், அவர்களை நாம் தனிமைப்படுத்தி, சிகிச்சை அளித்து பொருளாதாரத்தை இயக்க வேண்டும்.
இந்திய அரசு அரசு வேலைவாய்ப்புகளை மட்டும் நம்பியிருக்காமல் சிறந்த வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டியது அவசியம். இந்தியா தனது உற்பத்திக்கும், விற்பனைக்கும் சர்வதேசயளவில் நல்ல சந்தை இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்துள்ளது. அதனால் உலகளவில் ஆர்டர்களை எடுக்க இந்தியாவால் நிச்சயம் முடியும்.
மேலும் மக்களுக்கு மீண்டும் நோய்த் தொற்று ஏற்பட்டால் அத்தகைய சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது என்று நாம் திட்டமிட வேண்டும். அதே நேரத்தில் தற்போது மக்களை நாம் கவனித்துக்கொள்ள வேண்டும், அவர்களுக்குத் தேவையான உணவை வழங்க வேண்டும்” என்றார். 

raghuram-rajan-789

இந்த நிலையில் ரகுராம் ராஜன் – ராகுல் காந்தி உரையாடல் சுருக்கப்பட்டு வீடியோ வெளியிடப்பட்டு இருந்தது. ரகுராம் ராஜன் பின்புறம் இருந்த கடிகாரத்தை வைத்து எவ்வளவு நேரம் இந்த உரையாடல் நடந்திருக்கும் என்று ஆராய்ச்சியில் பா.ஜ.க-வினர் ஈடுபட்டு வருகின்றனர். ரகுராம் ராஜன் ஆலோசனையின் கருத்துக்களைப் பற்றி விவாதிப்பதற்கு பதில், அவர் எவ்வளவு நேரம் பேசினார், இவ்வளவு நேரம் பேசியது தேவைதானா என்று எல்லாம் பா.ஜ.க-வினர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை.