ஏழுமலையான் பக்தர்களை அச்சுறுத்தும் தீவிரவாதம் ! 24 மணிநேர கண்காணிப்பில் வந்தது திருப்பதி !

 

ஏழுமலையான் பக்தர்களை அச்சுறுத்தும் தீவிரவாதம் ! 24 மணிநேர கண்காணிப்பில் வந்தது திருப்பதி !

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறை மீண்டும் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறை மீண்டும் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

திருப்பதி மலை அடிவாரம் உள்ள அலிபிரி ஆகிய இடங்களும் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் வந்துள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

திருமலையில் 24 மணிநேரமும் பாதுகாப்பு வளையம் ரெட் அலர்ட் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் பாதுகாப்புப் படை பிரிவுகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.

திருப்பதி

மோப்ப நாய் படை, வெடிகுண்டு அகற்றும் படை உள்ளிட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வாகனங்கள் அனைத்தும் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றன.

 

திருப்பதி பிரமோற்சவ விழா கருட சேவைக்காக சென்னையில் இருந்து குடை ஊர்வலமாக கொண்டு வரப்படும். இதனை சீர்குலைக்க கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு புத்தூரில் பயங்கரவாதிகள் ஒரு வீட்டில் பதுங்கி இருந்தனர்.

 

திருப்பதி1

இதனை கண்காணித்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி 4 பயங்கரவாதிகளை சுற்றி வளைத்து பிடித்தனர். இப்போது அதேபோல் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனரா? என்ற சோதனை புத்தூரில் தீவிரமாக நடந்து வருகிறது.

 

அடையாளம் தெரியாத நபர்கள் யாராவது சுற்றிதிரிந்தாலோ அல்லது வீடுகளில் தங்கியிருந்தாலோ போலீசாருக்கு உடனடியாக தெரிவிக்கும்படி பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு வரும் வழிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சித்தாத்தூர், நாகலாபுரம், காட்பாடி கிறிஸ்டியான் பேட்டை, சேர்க்காடு, பரதராமி ஆகிய தமிழகஆந்திர எல்லை பகுதிகளில் போலீசார் வாகனங்களை தீவிரமாக சோதனை செய்த பின்னரே ஆந்திராவுக்குள் அனுமதிக்கின்றனர்.