ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 52 புள்ளிகள் உயர்ந்தது….

 

ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 52 புள்ளிகள் உயர்ந்தது….

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 52 புள்ளிகள் உயர்ந்தது.

கடந்த டிசம்பர் மாதத்தில் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனை நிலவரம் சிறப்பாக இருந்தது. அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தில் வரும் 15ம் தேதி கையெழுத்திட இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். இது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம் கண்டது.

வாகன விற்பனை

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் பவர்கிரிட், என்.டி.பி.சி., மகிந்திரா அண்டு மகிந்திரா, எல் அண்டு டி, இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் எச்.டி.எப்.சி. நிறுவனம் உள்பட 15 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. டைட்டன், இண்டஸ்இந்த் வங்கி, பஜாஜ் ஆட்டோ, ஓ.என்.ஜி.சி., டாடா ஸ்டீல், மாருதி மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்பட 15 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

பவர்கிரிட்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,362 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,063 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 196 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.155.80 லட்சம் கோடியாக உயர்ந்தது.

இண்டஸ்இந்த் வங்கி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 52.28 புள்ளிகள் அதிகரித்து 41,306.02 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 14.05 புள்ளிகள் ஏற்றம் கண்டு 12,182.50 புள்ளிகளில் முடிவுற்றது.