ஏற்றத்துடன் முடிவடைந்த பங்கு வர்த்தகம்! முதலீட்டாளர்களின் கையை கடித்த 1,867 நிறுவனங்கள்!

ஏற்றத்துடன் முடிவடைந்த பங்கு வர்த்தகம்! முதலீட்டாளர்களின் கையை கடித்த 1,867 நிறுவனங்கள்!

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 66 புள்ளிகள் அதிகரித்தது.

400 புள்ளிகள்

இன்று காலையில் பங்கு சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. சர்வதேச அளவில் எந்தவொரு பாதகமான நிகழ்வுகளோ, செய்திகளோ வெளியாகததால் பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் சுமார் 400 புள்ளிகள் வரை அதிகரித்தது. 

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 66 புள்ளிகள் அதிகரித்தது.

400 புள்ளிகள்

stock market

இன்று காலையில் பங்கு சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. சர்வதேச அளவில் எந்தவொரு பாதகமான நிகழ்வுகளோ, செய்திகளோ வெளியாகததால் பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் சுமார் 400 புள்ளிகள் வரை அதிகரித்தது. 

ஆனால் அதன்பிறகு மளமளவென சரிவை சந்தித்தது. முதலீட்டாளர்கள் லாப நோக்கத்தில் பங்குகளை விற்று தள்ளியதே அதற்கு காரணம். இருப்பினும் வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் சிறிது ஏற்றத்துடன்தான் முடிவடைந்தது.

15 நிறுவனங்கள்

stock market

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் டாட்டா ஸ்டீல், கோடக் வங்கி, என்.டி.பி.சி., டி.சி.எஸ். உள்பட 15 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேசமயம் மாருதி, ரிலையன்ஸ், ஸ்டேட் வங்கி உள்பட 15 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. பங்குச் சந்தைகளில் ஜெட் ஏர்வேஸ் பங்கின் விலை தொடர்ந்து சரிவை சந்தித்தது. இன்று மட்டும் அந்த பங்கின் விலை 18 சதவீதத்துக்கு மேல் குறைந்தது குறிப்பிடத்தக்கது. 

வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் முந்தைய வர்த்தக தினத்தின் முடிவை காட்டிலும் 66.40 புள்ளிகள் உயர்ந்து 39,112.74 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி முந்தைய வர்த்தக தினத்தின் முடிவை காட்டிலும் 0.05 புள்ளிகள் மட்டுமே அதிகரித்து 11,691.45 புள்ளிகளில் நிறைவடைந்தது.

stock market

நஷ்டம்

பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தாலும் ஒட்டு மொத்த அளவில் பார்த்தால் இன்று முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்தான். எப்படின்னு கேட்டா, மும்பை பங்குச் சந்தையில் இன்று 700 நிறுவனங்களின் பங்கு விலை மட்டுமே உயர்ந்தது. அதேசமயம் 1,867 நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது.

இன்னும் புரியும்படி சொல்லணும்னா, மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு இன்று ரூ.1,49,56,109.64 கோடியாக குறைந்தது. நேற்று வர்த்தகத்தின் முடிவில் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.1,50,23,047 கோடியாக இருந்தது.