ஏர் இந்தியா பங்குகளுக்கு கிராக்கி இல்லை ! மூடிவிட முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு பகீர் தகவல் !

ஏர் இந்தியா பங்குகளுக்கு கிராக்கி இல்லை ! மூடிவிட முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு பகீர் தகவல் !

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை தனியார் நிறுவனங்கள் வாங்காவிட்டால் மூடப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக மத்திய விமானப் போக்குவரத்துத் அமைச்சர் ஹர்திப் சிங் பூரி மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.
சுமார் 58 ஆயிரம் கோடி கடன் சுமை உள்ள ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை தனியார் நிறுவனங்கள் வாங்காவிட்டால் மூடப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக மத்திய விமானப் போக்குவரத்துத் அமைச்சர் ஹர்திப் சிங் பூரி மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.
சுமார் 58 ஆயிரம் கோடி கடன் சுமை உள்ள ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பெரும்பான்மை பங்குகளை மட்டும் விற்பதென கடந்த ஆண்டு முடிவு செய்தது மத்திய அரசு. ஆனால் யாரும் முன்வராத காரணத்தால் அனைத்து பங்குகளையும் விற்க மார்ச் மாதம் மத்திய அரசு முடிவு செய்திருந்தது.

airindia

இந்நிலையில் மாநிலங்களவையில் கேள்வி நேரத்திற்கு பதில் அளித்த மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஏர் இந்தியா நிறுவனத்தின் அனைத்துப் பங்குகளையும் விற்க மத்திய அரசு முயன்று வருகிறது. அதே சமயம் ஏர் இந்தியாவின் அனைத்து ஊழியர்களுக்கும் பாதிப்பின்றி சாதகமான முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவித்தார். ஒருவேளை ஏர் இந்தியா நிறுவனத்தை யாரும் வாங்காத பட்சத்தில் தனியார் மயமாக்கும் முயற்சி தோல்வி அடைந்தால் ஏர் இந்தியா நிறுவனத்தை மூடிவிடுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துத் அமைச்சர் ஹர்திப் சிங் பூரி தெரிவித்தார்.