ஏர் இந்தியாவை வாங்க ஆள் ரெடி…….களத்தில் இறங்கிய டாடா சன்ஸ்……

 

ஏர் இந்தியாவை வாங்க ஆள் ரெடி…….களத்தில் இறங்கிய டாடா சன்ஸ்……

ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா சன்ஸ் வாங்கப்போவது கிட்டத்தெட்ட உறுதியென தகவல்கள் வெளியாகியுள்ளது.

விமானச் சேவையில் ஈடுபட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் ஆரம்ப காலத்தில் நல்ல லாபத்தில்தான் ஓடியது. இருந்தாலும் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இதனால் ஏர் இந்தியாவை தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான நடவடிக்கையை சில ஆண்டுகளுக்கு முன் மேற்கொண்டது. அந்த முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.

டாடா சன்ஸ்

இதனையடுத்து, சமீபவத்தில் ஏர் இந்தியாவின் 100 சதவீத பங்குகளை விற்பனை செய்ய தயார் என மத்திய அரசு அறிவித்தது. மேலும், ஏா் இந்தியாவின் மொத்த கடனில் குறிப்பிட்ட சதவீதத்தை வாங்கும் நிறுவனம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தது. இந்நிலையில், டாடாஸ் ஏர் இந்தியாவை வாங்க போவது கிட்டத்தட்ட உறுதி என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஏர் ஏசியா

விமான சேவையில் ஈடுபட்டும் ஏர் ஏசியா இந்தியா நிறுவனம் டாடா சன்ஸ் மற்றும் மலேசிய தொழிலதிபர் டோனி பெர்னாண்டஸ் ஆகியோரின் கூட்டு வர்ததகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில்  ஏர் இந்தியாவை வாங்கி ஏர் ஏசியா இந்தியாவுடன் இணைக்க டாடா திட்டமிட்டுள்ளது.  இது தொடர்பாக டோனி பெர்னாண்டஸை டாடா குழுமம் அணுகியுள்ளதாக தகவல். ஏனென்றால் அவர்களுக்கு இடையிலான ஒப்பந்தப்படி, டோனி பெர்னாண்டஸ் இல்லாமல் டாடாவால் வேறு விமான நிறுவனத்தில் 10 சதவீதத்துக்கு மேல் முதலீடு செய்ய முடியாது. எனவே டாடா சன்ஸ் ஏர் இந்தியாவை வாங்க போவது உறுதி என தகவல் வெளியாகியுள்ளது.