ஏர் இந்தியாவை வாங்க ஆர்வம் காட்டும் பிரதமர் மோடியின் நண்பர் கவுதம் அதானி….

 

ஏர் இந்தியாவை வாங்க ஆர்வம் காட்டும் பிரதமர் மோடியின் நண்பர் கவுதம் அதானி….

விமானச் சேவையில் ஈடுபட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் ஆரம்ப காலத்தில் நல்ல லாபத்தில்தான் ஓடியது. இருந்தாலும் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகிறது.

ஏர் இந்தியாவை வாங்க கவுதம் அதானியின் அதானி குழுமம் ஆர்வமாக உள்ளது. இதற்கான விருப்ப மனுவை அடுத்த மாதம் அரசிடம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விமானச் சேவையில் ஈடுபட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் ஆரம்ப காலத்தில் நல்ல லாபத்தில்தான் ஓடியது. இருந்தாலும் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இதனால் ஏர் இந்தியாவை தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான நடவடிக்கையை சில ஆண்டுகளுக்கு முன் மேற்கொண்டது. அந்த முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.

adani-group.jpg

இதனையடுத்து, சமீபவத்தில் ஏர் இந்தியாவின் 100 சதவீத பங்குகளை விற்பனை செய்ய தயார் என மத்திய அரசு அறிவித்தது. மேலும், ஏா் இந்தியாவின் மொத்த கடனில் குறிப்பிட்ட சதவீதத்தை வாங்கும் நிறுவனம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தது. அண்மையில், ஏர் இந்தியாவை டாடா சன்ஸ் வாங்க போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், ஏர் இந்தியாவை வாங்க ஆர்வமாக உள்ளது அதானி குழுமம். அதானி குழுமம் நம் நாட்டின் மிகப்பெரிய தனியார் விமான நிலைய ஆபரேட்டராக ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் உள்ளது. தற்போது லக்னோ, அகமதாபாத் மற்றும் மங்களூரு ஆகிய விமான நிலையங்கள் அதானி வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

air-india1.jpg

ஏர் இந்தியாவை வாங்க விருப்பம் தெரிவித்து அடுத்த மாதம் அரசிடம் அதானி குழுமம் அறிக்கை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதானி குழுமத்தின் தலைவர் அதானி கவுதம், பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் ஏர் இந்தியாவை வாங்கும் போட்டியில் அதானி குழுமம், டாடா குழுமம், இந்துஜா குழுமம், இண்டிகோ மற்றும் நியுயார்க்கை சேர்ந்த நிதியம் ஆகியவை உள்ளன. இந்நிறுவனங்கள் விரைவில் ஏர் இந்தியாவை வாங்க விருப்பம் தெரிவித்து மனு அளிக்கும் என தெரிகிறது.  விருப்பம் தெரிவிக்கும் நடைமுறைக்கு பின், எதிர்கால ஏலதாரர்கள் ஏர் இந்தியாவின் தரவை அணுகலாம்.