ஏமாற்றத்தை கொடுத்த சிப்லா…. லாபம் ரூ.238 கோடியாக குறைந்தது….

 

ஏமாற்றத்தை கொடுத்த சிப்லா…. லாபம் ரூ.238 கோடியாக குறைந்தது….

சிப்லா நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.238 கோடி மட்டுமே ஈட்டியுள்ளது.

பிரபல மற்றும் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சிப்லா கடந்த மார்ச் காலாண்டின் நிதிமுடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 மார்ச் காலாண்டில் சிப்லா நிறுவனம் ஒட்டு மொத்த நிகர லாபமாக ரூ.238.49 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 33.32 சதவீதம் குறைவாகும். 2019 மார்ச் காலாண்டில் சிப்லா நிறுவனத்தின் ஒட்டு மொத்த நிகர லாபம் ரூ.357.68 கோடி ஈட்டியிருந்தது.

சிப்லா

2020 மார்ச் காலாண்டில் சிப்லா நிறுவனம் ரூ.355 கோடி லாபம் சம்பாதிக்கும் என பங்குச் சந்தை வட்டாரங்கள் கணித்து இருந்தன. ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக சிப்லா நிறுவனத்தின் லாபம் மிகவும் குறைந்துள்ளது. கடந்த மார்ச் காலாண்டில் சிப்லா நிறுவனத்தின் லாபம் மட்டுமல்ல அந்நிறுவனத்தின் வருவாயும் சிறிது சரிவை சந்தித்துள்ளது. 

சிப்லா

கடந்த மார்ச் காலாண்டில் சிப்லா நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.4,376.19 கோடியாக குறைந்துள்ளது. 2019 மார்ச் காலாண்டில் சிப்லா நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.4,403.98 கோடியாக உயர்ந்து இருந்தது. அதேகாலாண்டில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக ரூ.311 கோடி அல்லது விற்பனையில் 7 சதவீதத்தை சிப்லா செலவிட்டுள்ளது.