ஏப்.15 ஆம் தேதி திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம்! 

ஏப்.15 ஆம் தேதி திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம்! 

கொரோனா வைரஸ் பரவலுக்கு அதிமுக அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறிய மு.க.ஸ்டாலினின் கடிதத்துக்கு பதிலளித்து அறிக்கை வெளியிட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சீனாவில் நோய்த் தொற்று இருப்பதை அறிந்தவுடன், ஜனவரி மாதத்திலேயே கொரோனா பரிசோதனைக் கருவிகள், உடல் கவச உடைகள், மருந்துகள் உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்ய தமிழக அரசு ஆணை வழங்கியதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பட்டினபாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “மார்ச் 16ஆம் தேதியில் இருந்தே கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. கொரோனா பரவ திமுக தான் காரணம். கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை பாராட்ட ஸ்டாலினுக்கு மனம் இல்லை” என தெரிவித்தார்.

Stalin

இந்நிலையில் ஏப்.15 ஆம் தேதி திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படவுள்ளதாகவும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகளின் அணுகுமுறை குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஏப்.15 ஆம் தேதி காலை 10 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.