ஏப்ரல் 30ஆம் தேதியுடன் ஓய்வுபெறவுள்ள மருத்துவர்கள், செவிலியர்களுக்கு 2 மாத காலம் பணி நீட்டிப்பு!

 

ஏப்ரல் 30ஆம் தேதியுடன் ஓய்வுபெறவுள்ள மருத்துவர்கள், செவிலியர்களுக்கு 2 மாத காலம் பணி நீட்டிப்பு!

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28லட்சத்தை கடந்துள்ளது. ஒரு லட்சத்து 97ஆயிரம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தமிழகத்தில் நேற்று 1755 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் மத்திய மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். மேலும் அதற்கான வசதிகளையும் மாநில அரசு செய்துவருகிறது.

மருத்துவர்கள்

அதனொரு பகுதியாக ஏப்ரல் 30ஆம் தேதியுடன் ஓய்வுபெறவுள்ள மருத்துவர்கள், செவிலியர்களுக்கு 2 மாத காலம் பணி நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த முறையில் 2 மாத காலத்திற்கு தற்காலிக பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் தற்போது 1,323 செவிலியர்கள் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர், தேர்வு செய்யப்பட்டுள்ள செவிலியர்களுக்கு பணி ஆணை கிடைத்தவுடன் பணியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்களுக்கும் ஒப்பந்த முறையில் 2 மாத காலத்திற்கு பணி நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.