ஏடிஎமில் ‘200 ரூபாய்’ எடுக்க போன மக்களுக்கு கிடைத்ததோ ‘500 ரூபாய்’ நோட்டு!

 

ஏடிஎமில் ‘200 ரூபாய்’ எடுக்க போன மக்களுக்கு கிடைத்ததோ  ‘500 ரூபாய்’ நோட்டு!

500 ரூபாய் என்றால் யார் தான் சந்தோசப்பட மாட்டார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் வேலூரில் நடந்துள்ளது.

கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி…ஏடிஎமில் 200 ரூபாய் எடுக்க சென்ற மக்களுக்கு கிடைத்தது 500 ரூபாய் என்றால் யார் தான் சந்தோசப்பட மாட்டார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் வேலூரில் நடந்துள்ளது.

sbi

 ஓமலூர் அருகே பண்ணப்பட்டியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஏடிஎம் ஒன்றில் ரூ.200 என்று அழுத்திய வாடிக்கையாளருக்கு 500 ரூபாய் பணம் வெளியே வர, இந்த செய்தி அந்த ஊர் முழுவதும் காட்டுத்தீ போல பரவியது.  

sbi

இதனால் மக்கள் போட்டிபோட்டுக் கொண்டு 500 ரூபாயை ஜாலியாக வீட்டுக்கு எடுத்து சென்றனர். இந்த தகவல் வாங்கி அதிகாரிகள் காதுகளுக்குச்  செல்ல விரைந்து வந்த அவர்கள் ஏடிஎமை  பூட்டு போட்டனர். 

atm

இதுகுறித்து கூறியுள்ள அவர்கள், ‘ஏடிஎமில் 200 ரூபாய்  வைக்க வேண்டிய ரேக்கில்  500 ரூபாயை தவறுதலாக வைத்துள்ளதால் வாடிக்கையாளர்களுக்கு 500ரூபாய் பணம் கிடைத்துள்ளது. இதுவரை எவ்வளவு பணம் எடுக்கப்பட்டுள்ளது என்பதை கணக்கிடப் பின்னர்  அதற்கான இழப்பை பணம் வாய்த்த தனியார் நிறுவனமே செலுத்தவேண்டும்’ என்று  கூறியுள்ளனர்.