ஏங்கும் குடிமகன்களுக்காக கள்ளுக்கடையை திறக்க கேரள அரசு முடிவு!

 

ஏங்கும் குடிமகன்களுக்காக கள்ளுக்கடையை திறக்க கேரள அரசு முடிவு!

கேரளாவில் ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகள் திறப்பு இல்லை என்று அம்மாநில அரசு உறுதியபட கூறியுள்ளது. ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பல மாநிலங்கள் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகின்றன. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் மே.7 ஆம் தேதி முதல் மதுக்கடைகளும் திறக்கப்பட்டு, விற்பனை அமோகமாக நடைபெற்றுவருகிறது. இதனால், தமிழகத்தில் கொரோனா பரவல் இன்னும் வேகமாகலாம் என்று மருத்துவர்கள் எச்சரக்கைவிடுத்துள்ளனர். தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரள அரசு மதுக்கடைகள் விவகாரத்தில் தன்னுடைய நிலைப்பாட்டை அறிவித்துள்ளது. வழிபாட்டுத் தலங்களே திறக்கப்படாத நிலையில், மதுக்கடைகளைத் திறப்பது தவறான எண்ணத்தை ஏற்படுத்தும். அதனால், மே 17 வரை கேரளாவில் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 

பினராயி விஜயன்

இந்நிலையில் கேரளாவில் கள்ளுக்கடைகள் வருகிற 13-ஆம் தேதி முதல் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்துவருவதால் ஊரடங்கை தளர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவுன். மாநிலம் முழுதும் கள் இறக்கும் பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியதால் கள்ளுக்கடைகளை வருகிற 13-ஆம் தேதி திறக்கப்படும் என்றும் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார்.