எஸ்.பி.ஐ. வங்கி செய்த காரியத்தால் 4 கோடி மூத்த குடிமக்கள் பாதிப்பு

 

எஸ்.பி.ஐ. வங்கி செய்த காரியத்தால் 4 கோடி மூத்த குடிமக்கள் பாதிப்பு

ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) மூத்த குடிமக்களுக்கான பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை குறைத்ததால் சுமார் 4 கோடி மூத்த குடிமக்கள் பாதிக்கப்படுபவர் என தகவல் வெளியாகியுள்ளது.

பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் கடந்த வாரம் இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய கடனுக்கான வட்டி (ரெப்போ ரேட்) 0.25 சதவீதம் குறைத்தது. இதனையடுத்து வட்டி குறைப்பு பலனை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, முதலாவதாக ஸ்டேட் வங்கி அனைத்து முதிர்வு கால கடன்களுக்கான எம்.சி.எல்.ஆர். அல்லது கடனுக்கான குறைந்தபட்ச வட்டியை 0.10 சதவீதம் குறைத்தது. அதேசமயம் இது ரெப்போ ரேட்டுடன் இணைக்கப்பட்ட கடன்களுக்கு இந்த வட்டி குறைப்பு பொருந்தாது. இந்த புதிய வட்டி விகிதம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

இந்திய ரிசர்வ் வங்கி

சமேலும், சேமிப்பு மற்றும் பிக்சட் டெபாசிட்டுகளுக்கான வட்டியையும் ஸ்டேட் வங்கி குறைத்தது. சேமிப்பு கணக்கு டெபாசிட்டுகளுக்கான (இருப்பு ரூ.1 லட்சம் வரை) வட்டியை 0.25 சதவீதம் குறைத்தது. நவம்பர் 1ம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது. இதுதவிர சில்லரை குறித்த கால டெபாசிட் மற்றும் பல்க் குறித்த கால டெபாசிட்டுகளுக்கான வட்டியை முறையே 0.10 சதவீதம் மற்றும் 0.30 சதவீதம் குறைத்தது. இந்த புதிய வட்டி விகிதம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

மூத்த குடிமக்கள்

ஸ்டேட் வங்கியின் அறிக்கையின்படி, பிக்சட் டெபாசிட் கணக்குகளில் 4.1 கோடி மூத்த குடிமக்கள் சுமார் 14 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளனர். பெரும்பாலான மூத்த குடிமக்கள் வங்கியில் டெபாசிட்டுக்கு கிடைக்கும் வட்டி வருவாயை வைத்துதான் தங்களது காலத்தை தள்ளி வருகின்றனர். இந்நிலையில் மூத்த குடிமக்களுக்களின் பிக்சட் டெபாசிட்டுகளுக்கான ( 1 முதல் 2 ஆண்டு முதிர்வு காலம்) வட்டியை 7 சதவீதத்திலிருந்து 6.9 சதவீதமாக ஸ்டேட் வங்கி குறைத்துள்ளது. இதனால் 4 கோடிக்கும் அதிகமாக மூத்த குடிமக்கள் பாதிக்கப்படுவர்.