எஸ்.பி.ஐ. வங்கி கள்ளநோட்டுப் பிரிவு உங்களை அன்புடன் வரவேற்கிறது!

 

எஸ்.பி.ஐ. வங்கி கள்ளநோட்டுப் பிரிவு உங்களை அன்புடன் வரவேற்கிறது!

பத்தாயிரம் ரூபாய் என்பதால் பத்து நிமிடம் மூச்சு விடாமல் நடந்ததை மூர்த்தி சொன்னதை பக்குவமாய் கேட்டுக்கொண்ட வங்கிக்கிளையின் அதிகாரி, மூர்த்தியின் தோளில் கைபோட்டுக்கொண்டே வெளியே அழைத்துவந்து “சார் இன்னைக்கி டைம் முடிஞ்சிருச்சி, நீங்க போய்ட்டு நாளைக்கு வாங்க” என்று சொல்லி கதவை சாத்திவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.

நாமக்கல், சேந்தமங்கலம் மின்வாரிய முதல்நிலை முகவர் மூர்த்தி, சங்கரன் சாலையில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தில் 40 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்துள்ளார். மிஷினில் இருந்து வந்தப்பணத்தில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளில் ஐந்து நோட்டுகள் கிழிந்து, பல்வகை ப்ளாஸ்டிக் சர்ஜரிகளால் ஒட்டப்பட்டு இருந்ததைக் கண்டு வங்கிக்கிளையில் புகார் அளிக்க சென்றார். பத்து ரூபாய் நாணயத்தையே வாங்க மறுக்கிறார்கள் பேருந்துகளிலும், மளிகை கடைகளிலும். இதில் பத்தாயிரம் ரூபாய்க்கான‌ கிழிந்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை யார் வாங்குவார்கள் என்பதல் வேறு நோட்டுகள் தரும்படி கேட்டிருக்கிறார்.

damaged 2000 note

பத்தாயிரம் ரூபாய் என்பதால் பத்து நிமிடம் மூச்சு விடாமல் நடந்ததை மூர்த்தி சொன்னதை பக்குவமாய் கேட்டுக்கொண்ட வங்கிக்கிளையின் அதிகாரி, மூர்த்தியின் தோளில் கைபோட்டுக்கொண்டே வெளியே அழைத்துவந்து “சார் இன்னைக்கி டைம் முடிஞ்சிருச்சி, நீங்க போய்ட்டு நாளைக்கு வாங்க” என்று சொல்லி கதவை சாத்திவிட்டு உள்ளே சென்றுவிட்டார். கடுப்பான மூர்த்தி, கிழிந்து ஒட்டப்பட்ட கள்ள ரூபாய் நோட்டுக்களை வங்கி நுழைவாயிலின் முன்பு வைத்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்து பறந்துவந்த காவல்துறையினர், மூர்த்தியை சமாதானப்படுத்தி வங்கிக்குள் அழைத்து சென்றனர். மூர்த்தியிடம் புகார் மனு பெற்றுக்கொண்ட வங்கி அதிகாரிகள், ஒட்டப்பட்ட நோட்டுக்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர் எடுத்த 10 ஆயிரம் ரூபாய் பணத்தை திருப்பி தருவதாகவும் கூறினர். அப்படி வா மாமே வழிக்கு!