எஸ்.பி.ஐ பணம் எடுக்கும் வரம்பு குறைப்பு

 

எஸ்.பி.ஐ பணம் எடுக்கும் வரம்பு குறைப்பு

எஸ்.பி.ஐ வங்கியில் பணம் எடுக்கும் வரம்பை பாதியாக குறைத்து அவ்வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது

மும்பை: எஸ்.பி.ஐ வங்கியில் பணம் எடுக்கும் வரம்பை பாதியாக குறைத்து அவ்வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ., வங்கியின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுக்கும் வரம்பு நாளொன்றுக்கு ரூ.40,000 ஆக தற்போது இருந்து வருகிறது. இந்நிலையில், எஸ்.பி.ஐ., வங்கியின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுக்கும் வரம்பை ரூ.20,000-ஆக குறைத்து அவ்வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நடைமுறை அக்டோபர் 31-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளதாக எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.

ஏடிஎம் பணம் எடுப்பதில் மோசடிகள் நடப்பதாக அதிகளவில் புகார்கள் பெறப்பட்டதாலும், ரொக்கம் இல்லா பணப்பரிவர்தனையை ஊக்குவிக்கும் பொருட்டும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.