எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கு : குற்றவாளிகளை நள்ளிரவில் கேரளாவிற்கு அழைத்துச் சென்ற போலீஸ் !

 

எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கு : குற்றவாளிகளை நள்ளிரவில் கேரளாவிற்கு அழைத்துச் சென்ற போலீஸ் !

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் உள்ள சோதனை சாவடியில் பணியாற்றி வந்த எஸ்.ஐ வில்சன் பணியிலிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் உள்ள சோதனை சாவடியில் பணியாற்றி வந்த எஸ்.ஐ வில்சன் பணியிலிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலையில் ஈடுபட்ட குற்றவாளிகள் அப்துல் சமீம் மற்றும் தஃவ்பீக்கை கர்நாடகா மாநிலம் உடுப்பி ரயில் நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். அதன் பின்னர், அவர்கள் இரண்டு பேரையும் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன் படி, நேற்று குற்றவாளிகளிடம் விசாரணை அதிகாரி டி.எஸ்.பி. கணேசன் தலைமையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 

ttn

இந்நிலையில் நேற்று நள்ளிரவு குற்றவாளிகளை போலீசார் கேரளாவிற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அங்கு இவர்கள் தங்கியிருந்ததாகக் கிடைத்த தகவலின் பேரில், அவர்கள் இருந்த இடம், தவ்பீக்கின் உறவினர்கள் உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வில்சனை கொலை செய்த ஆயுதங்கள் இந்த வழக்கில் முக்கிய சாட்சி என்பதால் அதனைக் கைப்பற்றவும் போலீசார் முனைப்புக் காட்டி வருகின்றனர்.