எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் எடுக்கும் கட்டுப்பாடு இன்று முதல் அமல்

 

எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் எடுக்கும் கட்டுப்பாடு இன்று முதல் அமல்

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம்-ல் ரூ.20,000 மட்டுமே எடுக்கும் முறை இன்று முதல் அமலுக்கு வருகிறது

மும்பை: எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம்-ல் ரூ.20,000 மட்டுமே எடுக்கும் முறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ., வங்கியின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுக்கும் வரம்பு நாளொன்றுக்கு ரூ.40,000 ஆக இருந்தது. இதனிடையே, எஸ்.பி.ஐ., வங்கியின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுக்கும் வரம்பை ரூ.20,000-ஆக குறைத்து அவ்வங்கி அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. இந்த நடைமுறை அக்டோபர் 31-ம் தேதி (இன்று) முதல் அமலுக்கு வரவுள்ளதாகவும் எஸ்பிஐ வங்கி அறிவித்திருந்தது.

ஏடிஎம் பணம் எடுப்பதில் மோசடிகள் நடப்பதாக அதிகளவில் புகார்கள் பெறப்பட்டதாலும், ரொக்கம் இல்லா பணப்பரிவர்தனையை ஊக்குவிக்கும் பொருட்டும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்திருந்தது.

இந்நிலையில், எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம்-ல் ரூ.20,000 மட்டுமே எடுக்கும் முறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. SBI Classic அல்லது Maestro கார்டு வைத்திருப்பவர்கள் இன்று முதல் ஏடிஎம்-ல் ரூ.20,000 மட்டுமே எடுக்க முடியும்.