எளிமையாக நடந்து முடிந்த திருமணம்.. போலீசுக்கு உணவு வழங்கி ஆசி பெற்ற புதுமண தம்பதி!

 

எளிமையாக நடந்து முடிந்த திருமணம்.. போலீசுக்கு உணவு வழங்கி ஆசி பெற்ற புதுமண தம்பதி!

தடையை மீறி வெளியே வரும் நபர்கள் மீது போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் 26,496 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 824 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த கடந்த 14 ஆம் தேதி வரை ஊரடங்கு போடப்பட்டிருந்தும், கொரோனா பரவல் அதிகரித்ததால் மே மாதம் 3 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டது. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத சூழல் நிலவி வருகிறது. இருப்பினும் தடையை மீறி வெளியே வரும் நபர்கள் மீது போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

ttn

இதனிடையே கொரோனாவால் பல திருமணங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. வீடியோ காலில் நிச்சயதார்த்தம், வீடியோ காலில் ஆசீர்வாதம் என கொரோனா புது மணத்தம்பதிகளின் வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது. இது ஒரு புறமிருக்க, கூட்டம் கூட்டி திருமணம் நடத்தி சர்ச்சையில் சிக்கும் திருமணங்களும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இந்நிலையில், கோவையில் குடும்ப உறவினர்களுடன் எளிமையாக ஒரு காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணம் முடிந்த கையோடு, மாலையை கூட கழட்டாமல் அந்த தம்பதி கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு உணவு வழங்கி அவர்களிடம் ஆசி பெற்றுள்ளனர்.