எல்.கே.ஜி, யுகேஜி வகுப்புகளின் விடுமுறை நிறுத்தி வைப்பு : குழப்பத்தில் பெற்றோர்கள்!

 

எல்.கே.ஜி, யுகேஜி வகுப்புகளின் விடுமுறை நிறுத்தி வைப்பு : குழப்பத்தில் பெற்றோர்கள்!

100க்கு மேற்பட்ட உலக நாடுகளில் பரவி அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியுள்ளது.

100க்கு மேற்பட்ட உலக நாடுகளில் பரவி அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியுள்ளது. இந்தியாவில் சுமார் 60க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் முதன்முதலாக  கொரோனாவால் சவுதியிலிருந்து திரும்பிய 70 வயது முதியவர் உயிரிழந்த நிலையில் மக்களின் பீதி இன்னும் அதிகரித்தது. 

ttn

அதனால் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாநில அரசுகளும் அறிவுறுத்தி வருகின்றன. மக்கள் அதிகம் கூடும் இடங்களான தியேட்டர்கள், மால்கள் உள்ளிட்டவற்றை மூடும் படி கர்நாடகா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் உத்தரவிடப் பட்டுள்ளது. கொரோனா வைரஸ் எளிதில் குழந்தைகளுக்குப் பரவும் என்பதால் ப்ரீ கேஜி, எல்.கே.ஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்கு வரும் 31 ஆம் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதே போல கேரளாவிலும் 5 ஆம் வகுப்பு வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அந்த விடுமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், விடுமுறை குறித்து பள்ளிகளுக்குத்  தகவல் தெரிவிக்க வேண்டாம் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை ஆணையர் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகின்றன. இந்த தகவல் பெற்றோர்களைக் குழப்பமடையச் செய்துள்ளது.