எல்.ஐ.சி.யின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

 

எல்.ஐ.சி.யின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ஆயுள் காப்பீட்டு கழகம் அதாங்க எல்.ஐ.சி.யின் மொத்த சொத்து மதிப்பு போன வருஷம் 9 சதவீதம் அதிகரித்து ரூ.31.1 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

பொதுவாக எல்லோருக்கும் எல்.ஐ.சி.ன்னா காப்பீட்டு நிறுவனம்தான்னு நினைச்சுட்டு இருப்பாங்க. ஆனா மறுபக்கத்தை பார்த்தா அசந்து போயிருவோம். மிகப்பெரிய முதலீட்டு நிறுவனமாகவும் எல்.ஐ.சி. இருக்கு. பங்குச் சந்தையில் பல ஆயிரம் கோடியை அசால்டா கெத்தா முதலீடு செய்து அதன் மூலம் நல்ல காசு பார்த்து வருகிறது. பங்குச் சந்தையில் உள்ள பல முன்னணி தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் எல்.ஐ.சி. மூலதனம் செய்துள்ளது.

வருவாய்

பாலிசி முதிர்வு, இறப்பு பலன்கள் மற்றும் ரத்து போன்றவற்றுக்காக கொடுக்கும் தொகையை காட்டிலும் எல்.ஐ.சி.க்கு கிடைக்கும் பிரீமிய வருவாய் அதிகமாக உள்ளது. மேலும், முதலீடுகளால் கிடைக்கும் வருவாயும் எல்.ஐ.சி.யின் சொத்து மதிப்பை உயர்த்தி வருகின்றன. 

கடந்த மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் எல்.ஐ.சி.யின் மொத்த சொத்து மதிப்பு ரூ.31.1 லட்சம் கோடியாக உயர்ந்தது. 2017-18ம் நிதியாண்டின் முடிவில் சொத்து மதிப்பு ரூ.28.5 சதவீதம் கோடியாக இருந்தது. ஆக, 2018-19ம் நிதியாண்டில் எல்.ஐ.சி.யின் மொத்த சொத்து மதிப்பு 9 சதவீதம் உயர்ந்துள்ளது.

பாலிசி

கடந்த நிதியாண்டில் எல்.ஐ.சி.யின் மொத்த பிரீமிய வருவாய் 6 சதவீதம் உயர்ந்து ரூ.3.4 லட்சம் கோடியாக இருந்தது. அதேசமயம் அந்நிறுவனத்தின் முதலீடு வாயிலான வருவாய் ரூ.2.2 லட்சம் கோடியாக உள்ளது. ஆக, கடந்த நிதியாண்டில் எல்.ஐ.சி. ஒட்டு மொத்த வருவாய் ரூ.5.6 லட்சம் கோடியாக உள்ளது. முந்தைய நிதியாண்டில் இது ரூ.5.2 லட்சம் கோடியாக இருந்தது.