எல்லா தல’யும் தளபதிக்கு கீழே தான்: மீண்டும் ட்விட்டரில் மோதி கொண்ட தல-தளபதி ரசிகர்கள் 

 

எல்லா தல’யும் தளபதிக்கு கீழே தான்: மீண்டும் ட்விட்டரில் மோதி கொண்ட தல-தளபதி ரசிகர்கள் 

தல- தளபதி ரசிகர்கள் மீண்டும்  ட்விட்டரில் மோதி கொண்டனர். 

எல்லா தல’யும் தளபதிக்கு கீழே தான்: மீண்டும் ட்விட்டரில் மோதி கொண்ட தல-தளபதி ரசிகர்கள் 

சென்னை: தல- தளபதி ரசிகர்கள் மீண்டும்  ட்விட்டரில் மோதி கொண்டனர். 

சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் தல, தளபதி ரசிகர்கள் அதிகப்படியாக மோதி கொள்கின்றனர். என்ன தான் அந்த ஹீரோக்கள் நண்பர்களாகப் பழகி வந்தாலும் அவரது ரசிகர்கள் மட்டும் எப்போதும் எலியும் பூனையுமாகவே சண்டை போட்டுக் கொள்கின்றனர். 

இவர்களின் சண்டை சமீபத்தில் அமைதியாக இருந்தால் நிலையில் தற்போது மீண்டும் இன்று தொடங்கியுள்ளது.இந்த நிலையில் சமீபத்தில் தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதையொட்டி தல ரசிகர்கள் ட்விட்டரில் ட்வீட் செய்து தெறிக்க விட்டனர். 

அதைத்தொடர்ந்து அந்த படத்தின் வசூல் குறித்த விவரம் நேற்று மாலை வெளியானது. அதை கொண்டாடும் விதமாகத் தல ரசிகர்கள் ட்விட்டரில் #AllEmperorsUnderAJITHFoot என்னும் ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்ரெண்ட் செய்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகத் தளபதி ரசிகர்கள் #AllThalaUnderThalapathyFoot என்னும் ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்வீட் செய்து வருகின்றனர். இவர்களின் சண்டை எப்போது முடிகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்..