எல்லாத்துக்கும் காரணம் அமித்ஷாதான்… அரசியல் சாணக்கியனை போட்டு தாக்கிய அரவிந்த் கெஜ்ரிவால்!

 

எல்லாத்துக்கும் காரணம் அமித்ஷாதான்… அரசியல் சாணக்கியனை போட்டு தாக்கிய அரவிந்த் கெஜ்ரிவால்!

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மக்கள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக அமைதியான முறையில் போராடி வந்தனர். டிரம்ப் இந்தியா வந்த நேரத்தில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவான போராட்டம் என்று பா.ஜ.க-வும் களத்தில் குதித்தது. இதனால், வடகிழக்கு டெல்லி பற்றி எரிந்தது. 

டெல்லியில் நடந்த கலவரத்துக்கு பா.ஜ.க தான் காரணம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தேசிய பாதுகாப்பு ஆலோசரிடம் முகத்தில் அடித்ததுபோல கூறியதாக வெளியான செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மக்கள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக அமைதியான முறையில் போராடி வந்தனர். டிரம்ப் இந்தியா வந்த நேரத்தில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவான போராட்டம் என்று பா.ஜ.க-வும் களத்தில் குதித்தது. இதனால், வடகிழக்கு டெல்லி பற்றி எரிந்தது. 

delhi riot

கலவரம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்த மக்கள் அனைவரும், பாரதிய ஜனதா கட்சியின் வெறுப்பு பிரசாரமே கலவத்துக்குக் காரணம் என்று கூறினர். துணை நிலை ஆளுநர், அரவிந்த் கெஜ்ரிவாலுடன் 2 மணி நேரம் ஆலோசனை நடத்திய தோவல், சட்டம் ஒழுங்கு தோல்விக்கு மாநில அரசுதான் காரணம் என்றார். போலீசை கையில் வைத்துள்ள அமித்ஷா, துணை நிலை ஆளுநரைப் பற்றி எதுவும் குறிப்பிடாமல் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பழிபோடும் நடவடிக்கையில் தீவிரம் காட்டப்பட்டது.
ஆனால், இதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதிலடி கொடுத்துள்ளார். “ஷாஹின்பாக்கில் நடந்துவந்த அமைதி போராட்டம் டெல்லி முழுக்க பரவுவதை உங்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் ஜீரணிக்க முடியவில்லை. தொடக்கத்தில் இருந்தே இந்த பிரச்னையை அரசியல் கண்னோட்டத்தில் அவர் பார்த்து வருகிறார். அவரது கட்டுப்பாட்டில் உள்ள உள்துறைக்கும் உளவுத்துறைக்கும் சில உத்தரவுகள் போயிருக்கின்றன. சமூக விரோதிகள் உளவுத் துறையினரால் டெல்லிக்கு அழைக்கப்பட்டு, போராட்டக்காரர்கள் மத்தியில் களமிறக்கப்பட்டுள்ளனர்.

delhi-riot

மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர், பா.ஜ.க தலைவர்கள் கபில் மிஸ்ரா, பர்வேஷ் சர்மா ஆகிய மூன்று பேரும் உள்துறை அமைச்சகத்தால் தூண்டப்பட்டுள்ளனர். அவர்களுடைய வெறுப்புப் பிரசாரம் போராட்டக்காரர்களோடு கலந்திருந்த சமூக விரோதிகளை கொந்தளிக்க வைத்தது. இதை எதிர்பார்த்திருந்த பா.ஜ.க பிரமுகர்களின் கும்பல் கல்வீசித் தாக்குதல் நடத்தவே கலவரம் வெடித்தது.
காவல்துறையின் கைகளை மத்திய உள்துறை அமைச்சகம் கட்டிப்போட்டிருந்ததால் தடுக்க வேண்டிய நேரத்தில் அவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். மேலும், உணர்வுப்பூர்வமாக போராடிய மக்களை தேடித்தேடித் தாக்குதலும் நடத்தினார்கள். அவர்களுக்கு இணையாக சிஏஏ ஆதரவு இளைஞர்களும் களமிறங்கவே, கலவரம் வெடித்தது, கட்டிடங்கள், வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. பிரச்னைகளுக்கு சூத்திரதாரி அமித்ஷாதான்.

amit-shah

மக்கள் விரும்பாத சட்டத்தை அவர்கள் மீது திணித்து, அதை அவர்கள் எதிர்க்கும் சூழலில் அதைத் தீர்க்க முன்வந்திருக்க வேண்டும். போராட்டக்காரர்களை சந்தித்து அவர்களது பயத்தைப் போக்கியிருக்க வேண்டும். அந்த பொறுப்புணர்வு மத்திய அரசுக்கு இல்லை. கலவரம் உருவாவது லாபம் என்று கருதியதுதான் இந்த வன்முறைக்கு காரணம்” என்று கூறியிருக்கிறார்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் பேச்சு போலீசார் கண்டனம் தெரிவித்துள்ளனர். சிஏஏ ஆதரவு போராட்டத்தை ஒடுக்க சிஏஏ எதிர்ப்பாளர்கள் செய்த சூழ்ச்சி என்று அவர்கள் இதை குறிப்பிட்டுள்ளனர். மேலும் அஜித் தோவல், சில படங்களை காட்டி, கலவரத்தைக் கட்டுப்படுத்த முதல்வர் என்ற வகையில் முயற்சித்திருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

arvind-kejriwal-890

இதற்கு கெஜ்ரிவால், அமித்ஷாவின் சட்டத்தை எதிர்த்துத்தான் போராட்டம் நடக்கிறதே தவிர என்னை எதிர்த்து இல்லை” என்று கூறியுள்ளார்.
அனைத்து ஆய்வுகளும் ஆலோசனைகளும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடினவர்கள் பற்றி மட்டுமே இருந்தது என்று கூறப்படுகிறது. முழுக்க முழுக்க குடியரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் மீது குற்றம் சுமத்தும் வகையில் ஆதாரங்களை திரட்டி பிரதமருக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் போராட்டுபவர்களை ஒடுக்க அதிகாரங்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.