எல்லாத்துக்கும் காரணம் அந்த 120 கோடி ரூபாய்தாங்க‌

எல்லாத்துக்கும் காரணம் அந்த 120 கோடி ரூபாய்தாங்க‌

கும்பகோணம் வீர சைவ பெரிய‌ மடத்தை நிர்வகிப்பதில், பழைய மடாதிபதி நீலகண்ட சுவாமிகள் மற்றும் நிர்வாக குழு இடையே ஏற்பட்ட மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. நிர்வாகக்குழுவால் புதிதாக நியமிக்கப்பட்ட மடாதிபதியை, பழைய மடாதிபதியின் ஆட்கள் அடித்துவிரட்டிவிட்டு, பழைய மடாதிபதியை திரும்பவும் அரியணையில் ஏற்றினர். இது தொடர்பாக இரண்டு தரப்பினரும் தொடர்ந்து வழக்கு விசாரணையில் இருக்கிறது.

கூட்டணி கட்சிகளுக்குள் நடக்கும் கும்மாங்குத்து ஒருபக்கம் என்றால், பெரிய அரசியல்வாதிகளின் குடும்பத்தில் பங்காளிச்சண்டை படுசுவாரஸ்யமாக இருக்கும். சரி, அரசியல்னா அடிதடிதானே, இவிங்களுக்கு நல்ல புத்தி குடு ஆண்டவா என கோவிலுக்கு சாமிகும்பிட போனால், அங்கே சாமியார்கள் தங்களுக்குள் போட்டுக்கொள்ளும் குஸ்தியை என்னவென்று சொல்வது? காஞ்சிபுரத்தில் மூன்று நாட்களுக்கு முன்பு இருதரப்பினருக்கிடையே ‘பக்தி’சண்டை நடந்தது என்றால், இன்றைய பகல்காட்சி கும்பகோணத்தில்.

Kumbakonam Mutt

கும்பகோணம் வீர சைவ பெரிய‌ மடத்தை நிர்வகிப்பதில், பழைய மடாதிபதி நீலகண்ட சுவாமிகள் மற்றும் நிர்வாக குழு இடையே ஏற்பட்ட மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. நிர்வாகக்குழுவால் புதிதாக நியமிக்கப்பட்ட மடாதிபதியை, பழைய மடாதிபதியின் ஆட்கள் அடித்துவிரட்டிவிட்டு, பழைய மடாதிபதியை திரும்பவும் அரியணையில் ஏற்றினர். இது தொடர்பாக இரண்டு தரப்பினரும் தொடர்ந்து வழக்கு விசாரணையில் இருக்கிறது.

Seer in Kumbakonam Mutt

இந்நிலையில், வீர சைவ பெரிய மடத்தின் பழைய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில், மடத்திற்கு சொந்தமான வீரபத்திரசுவாமி கோவிலில் இருந்த விலைமதிப்பில்லாத சோழர்கால உற்சவர் சிலை மற்றும் வெள்ளி அபிஷேக சாமான்கள் காணாமல் போனது குறித்து சிலை திருட்டு தடுப்புப் பிரிவில் புகார் அளிக்க நிர்வாக குழு முடிவு செய்துள்ளது. இரண்டு தரப்பினர் இடையே வலுக்கும் பிரச்சினைகளால் கும்பகோணம் வீர சைவ பெரிய மடத்தில் பரபரப்பு நீடித்து வருகிறது. பெங்களூருவில் உள்ள‌ மடத்தின்  இடத்தை மெட்ரோ ரயில் நிர்வாகம் எடுத்துக்கொண்டதற்காக வழங்கப்பட்ட இழப்பீடு தொகை மட்டும் 120 கோடி ரூபாய் என்பதை கவனித்தில் வைத்தால், பிரச்னைக்கான காரணம் புரியும்.