எல்கேஜி பட இயக்குநருக்கு கிடைத்த விலையுயர்ந்த பரிசு!

 

எல்கேஜி பட இயக்குநருக்கு கிடைத்த விலையுயர்ந்த பரிசு!

எல்.கே.ஜி. படத்தின் இயக்குநர் பிரபுவுக்கு கார் பரிசளித்துள்ளார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.

சென்னை: எல்.கே.ஜி. படத்தின் இயக்குநர் பிரபுவுக்கு கார் பரிசளித்துள்ளார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.

ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக அறிமுகமான ‘எல்.கே.ஜி’ திரைப்படம் கடந்த 22-ம் தேதி வெளியானது. பிரபு இயக்கியுள்ள இப்படத்தின் கதை, திரைக்கதையை ஆர்.ஜே.பாலாஜி எழுதியுள்ளார். இதில் பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் நடித்ததிருந்தனர். முழுக்க முழுக்க சமீபத்து  அரசியலைக் கலாய்க்கும் வகையில் அமைந்து இருக்கும் இப்படத்தின் வசூல் படத்தின் பட்ஜெட்டை விட மூன்று மடங்கு லாபம் பெற்றுள்ளதாம்.

அந்த வகையில், இத்திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை விட அதிகமான வரவேற்பு பெற்றுவருவதால், படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் இயக்குநர் பிரபுவுக்கு புதிய கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். மேலும் படத்தில் பணியாற்றிய உதவி இயக்குநருக்கும் சிறப்பு பரிசு வழங்கியுள்ளார்.

மேலும் எல்.கே.ஜி.வெளியாகி 2 வாரங்கள் கடந்த நிலையில் தமிழகத்தில் மட்டும் அல்ல பெங்களூரிலும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது.