எலுமிச்சை பழத்த வச்சி ஜூஸ் மட்டுமல்ல காரும் ஓட்டலாம்…

 

எலுமிச்சை பழத்த வச்சி ஜூஸ் மட்டுமல்ல காரும் ஓட்டலாம்…

விளாடிவோஸ்டாக் பகுதியைச் சேர்ந்த கார் மெக்கானிக் காரேக் என்பவர் ஆயிரம் எலுமிச்சம் பழங்களை அறுத்து வைத்து அதிலிருந்து

எலுமிச்சை பழங்களிலிருந்து மின்னூட்டம் பெற்று அதன் மூலம் காரை இயக்கி ரஷ்யாவை சேர்ந்த மெக்கானிக் ஒருவர் சாதனை படைத்துள்ளார் . 

பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் மற்றும் டிக்டாக்கில் கடந்த சில தினங்களுக்கு முன் உருளைக்கிழங்கிலிருந்து மின்சாரம் பெறப்படும் வீடியோ, மற்றும் அதனை கொண்டு மொபைல் சார்ஜ் செய்யும் வீடியோ வைரலானது. இந்நிலையில் தற்போது எலுமிச்சை பழத்திலிருந்து காரின் பேட்டரிக்கு முன்சாரம் செலுத்தப்பட்டு கார் இயங்கும் வீடியோ வைரலாகி வருகிறது. முதன்முறையாக இந்த வீடியோவை ‘கேரேஜ் 54’  என்ற யூடியூப் சேனல் பதிவேற்றம் செய்திருந்தது. 

lemon

அந்த வீடியோவில் ரஷ்யாவைச் சேர்ந்த மெக்கானிக் ஒருவர் எலுமிச்சை பழங்கள் மூலம் காரை இயக்கி ஆச்சரியப்படுத்தி வருகிறார். விளாடிவோஸ்டாக் பகுதியைச் சேர்ந்த கார் மெக்கானிக் காரேக் என்பவர் ஆயிரம் எலுமிச்சம் பழங்களை அறுத்து வைத்து அதிலிருந்து மின்னூட்டம் பெற்று தனது காரை இயக்கி காட்டுகிறார். எலுமிச்சை பழங்களில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாகம் மின்சாரத்தை உருவாக்குகின்றன என காரேக் தெரிவிக்கிறார். 

lemon

இரண்டு பாதியாக அறுக்கப்பட்டுள்ள அந்த எலுமிச்சை பழங்களிலிருந்து மின்னூட்டம் பெறப்படுகிறது. ஒரு பாதி அளவுள்ள எலுமிச்சை பழத்திலிருந்து  0.96 வோல்ட் மின்சாரம் பெறப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.  ஆயிரம் எலுமிச்சை பழங்கள் இருந்தால் ஒரு காரை இயக்கலாம் என்கிறார் காரேக்.