எரிபொருள் இல்லாததால் நடுரோட்டில் தரையிறங்கிய விமானம்

 

எரிபொருள் இல்லாததால் நடுரோட்டில் தரையிறங்கிய விமானம்

அமெரிக்காவில் எரிபொருள் இல்லாததால் சிறிய விமானம் ஒன்று அவசரமாக சாலையில் தரையிறங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவில் எரிபொருள் இல்லாததால் சிறிய விமானம் ஒன்று அவசரமாக சாலையில் தரையிறங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஃபுளோரிடா அருகில் உள்ள மெயிட்லேண்ட் என்ற இடத்தில் சிறிய ரக விமானம் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் விமானம் தரையில் விழும் நிலை உருவானது. இதனையறிந்த விமானி, விமானத்தை அருகில் இருந்த நெடுஞ்சாலையில் அவசரமாக தரையிறக்கியுள்ளார். அப்போது சாலையில் வேகமாக வந்த கார் மீது விமானம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த ஒருவர் படுகாயமடைந்தார். இந்த சம்பவம் குறித்து மெயிட்லேண்ட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.