எம்.பி தேர்தல் வெற்றி எதிர்த்து வழக்கு… நிராகரிக்கக் கோரி கனிமொழி புதிய மனு!

 

எம்.பி தேர்தல் வெற்றி எதிர்த்து வழக்கு… நிராகரிக்கக் கோரி கனிமொழி புதிய மனு!

தூத்துக்குடி நாடாளுமன்றத் தேர்தலில் கனிமொழி வெற்றி பெற்றதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நிராகரிக்க வேண்டும் என்று கனிமொழி தாக்கல் செய்த வழக்கில் பதில் அளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட கனிமொழி வெற்றி பெற்றார்.

தூத்துக்குடி நாடாளுமன்றத் தேர்தலில் கனிமொழி வெற்றி பெற்றதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நிராகரிக்க வேண்டும் என்று கனிமொழி தாக்கல் செய்த வழக்கில் பதில் அளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட கனிமொழி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து அ.தி.மு.க கூட்டணி தரப்பில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜன் படுதோல்வி அடைந்தார். ஆனால், கனிமொழியின் வெற்றியை எதிர்த்து அவர் நீதிமன்றம் சென்றார். 

dmk

தெலங்கான ஆளுநராக தமிழிசை நியமிக்கப்பட்டதால், அவருக்குப் பதிலாக இந்த வழக்கை ஶ்ரீவைகுண்டம் பா.ஜ.க நிர்வாகி முத்துராமலிங்கம் அனுமதிகேட்டார். அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. சந்தான குமார் என்பவர் தொடர்ந்த வழக்குக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்திருந்தது. இந்த சூழ்நிலையில் கனிமொழி வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, கனிமொழி தரப்பில், “சந்தான குமார் தொடர்ந்த வழக்குக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது பற்றி கனிமொழி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. தேர்தலில் பணம் கொடுத்தேன் என்பதற்கான ஆதாரத்தை குறிப்பிடவில்லை.

வேட்புமனு குறைபாட்டுடன் இருந்ததற்கான ஆதாரத்தைத் தெரிவிக்கவில்லை. எனவே, இந்த மனுக்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு தொடர்பாக பதில் அளிக்கும்படி பா.ஜ.க பிரமுகர் முத்துராமலிங்கம், தேர்தல் ஆணையம் மற்றும் தூத்துக்குடி தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வழக்கு விசாரணையை மார்ச் மாதம் 1ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.